பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்505

உரைத்தவரும் ஆகிய இவரோடு, அம்மொழியை ஓதுவிக்கும் நல்லாசிரியன் முதலிய குரவர்களை நிந்தனை செய்தோரும் இறைவன் செவியறிவுறுத்த ஓதுதற்குரிய மெய்ந்நூலையும், அவ்விறைவன் திருக்கோயிற்குரிய பொருள்களையும், நூல்களை வரம்பிட்டுக் கூறும் நல்லாசிரியனுடைய பொருளையும் களவு செய்தோரும், மிகைத்தீவினை செய்தோர் என்று ஆன்றோர் கூறுவர்.

(வி - ம்.) புரை - உவமம். மொழி - வேதாகமமொழி. கரை செய்தல் - ஓதல். வரைசெய்தல் - வரையறை செய்தல். வௌவுதல் - களவு முதலியவற்றாற் கவர்தல்.

(227)

 கடவுள் பொருளைக் கவர்ந்தோரைக் கனகங் கொடுத்து மடர்ப்பரிதேல்
 விடுக வுறைந்த தேசத்தை விடாது பயிலின் மற்றவரும்
 அடரு மதிபா தகம்புரிந்தோ ராவ ரதிபா தகக்கணித்தாய்த்
 தொடரும் வினையு முளததுவுந் தொகுத்த வதிபா தகத்தடங்கும்.

(இ - ள்.) இறைவனுக்குரிய பொருளைக் கவர்ந்து கொண்டவரை இயலுமேற் கொன்றொழித்திடுக. இயலாவிடின் ஆற்றலுடையார்க்குப் பொன் கொடுத்தேனும் அத்தீயவரைக் கொல்லுக. அதுவும் இயலாதாயின் அவ்வூரைவிட்டு அகன்று போய்விடுக. போகாமல் அவர்க்கிடங் கொடுத்து அவ்விடத்திலேயே வாழ்வாராயின், அத்தகையோரும் மிகைத்தீவினை செய்தவரேயாவர். இனி அம் மிகைத்தீவினைக்கு இனமாய் வருகின்ற தீவினைகளும் பற்பல வுள்ளன ; அவையும் முன் தொகுத்த அம் மிகைத்தீவினையிலேயே அடங்கும்.

(வி - ம்.) கனகம் - பொன். அடர்த்தல் - கொல்லுதல். அடர்தல் - செறிதல். அணித்து - நெருங்கியது ; இனமாயது என்றவாறு. உளது - சாதியொருமை.

(228)

 பொருவி லிறையா சாற்கன்பு புரியார் பூசை புகழ்ந்துவவார்
 இருவர் தமக்கும் வறங்கூர்கா லேது முதவார் பொருளிழப்பின்
 மருவும் பணியேன் றனவிளையார் வௌவு நியதி தனைவிடுப்பார்
 பெரிய தவத்தோர் தமையிகழ்வார் பிரானை யிகழ்ந்தோ ரிவர்நிகர்ப்பார்.

(இ - ள்.) ஒப்பற்ற இறைவன்பாலும் ஆசிரியன்பாலும் அன்பு புரியாதவரும், வழிபாடு செய்யாதவரும், வற்கடம் வந்துற்றபொழுது அவ்விருவர்க்கும் சிறிதும் வழங்காதவரும், தமக்கும் வறுமைக்காலமாயினும் அவர்பாற் சென்று தம்மாலியன்ற உடற்பணியேனும் செய்யாதவரும் நியதியாக மேற்கொள்ளும் வழிபாடு முதலியவற்றைவிட்டவரும் பெரிய தவத்தின்மேற் கொண்ட துறவோரை இகழ்வோரும், இறைவனை இகழ்ந்தோரும் இன்னோரன்னவரும்.

(வி - ம்.) பொருவு - உவமை. இருவர் - இறைவனும் ஆசானும். ஏதும் - சிறிதும் என்பதுபட நின்றது. பொருளிழப்பு என்றது வறுமை நிலையினை. பிரான் - இறைவன்.

(229)

 புனித முடலோ டிடம்பயிற்றாப் பூசை புரியா தரனூலை
 துனிஇ பயில்வார் பயில்விப்பா ரேற்பார் பொருளாய் வார்வரைவார்