பக்கம் எண் :

506தணிகைப் புராணம்

 துனிவின் விடுத்துப் புறநூலைச் சூழ்வா ரதுசேர் புத்தகத்தை
 நனிவிற் றிடுவா ரிவர்நம்பன் வாக்கை யிகழ்ந்தார் நல்லினமே.

(இ - ள்.) உடலையும் இடத்தையும் தூய்மை செய்யாமலும் வழிபாடியற்றாமலும் இறைவனருளிய மெய்ந்நூலை இனிதே ஓதுப வரும், ஓதுவிப்பவரும் கேட்போரும் அவற்றின் பொருளை ஆராய்பவரும், வரைவோரும், வெறுப்பாலே அம் மெய்ந்நூலை இகழ்ந்துவிட்டுப் புற நூல்களை விரும்புவோர், இறைவன் மொழி சேர்ந்த நூலை விற்றுண் போர் என்னும் இவரெல்லாம் இறைவன் மொழியை இகழ்ந்தோரை ஒத்து அவர்க்கினமாகிய மிகைத்தீவினையாளர் ஆவர்.

(வி - ம்.) புனிதம் - தூய்மை. அரன் - சிவபெருமான். ஏற்றல் - கேட்டல். புறநூல் - புறச் சமயநூல் உலகநூல் முதலியன. அது அவ்விறைவன் மொழி. நம்பன் - பெருமையுடயோன்; இறைவன்.

(230)

வேறு

 ஆரியற் பணியா தறம்பயீ னூலை யாதரிப் பார்பணி புரியார்
 ஆரியன் பணிசெய் பவர்தமை யொழிப்பா ரடுமிடர் மூப்புவந் துறுங்கால்
 ஆரியற் றணப்பா ரவன்மனை புதல்வ ராதியை யவமதித் துழல்வார்
 ஆரியற் கிகலி யெதிருரை கொடுப்பா ராரியற் பழித்தவர்க் கினமே.

(இ - ள்.) நல்லாசிரியனை வழிபடாமல் இறையறம் பயிலும் மெய்ந்நூலை விரும்புவோரும், ஆசிரியனுக்குப் பணிபுரியாதவரும், பணி செய்வோரை விலக்குவோரும், வருத்துகின்ற இடுக்கண் மூப்புப் பிணி முதலிய ஆசிரியனுக்கு வந்தெய்திய பொழுது அவனைப் பிரிந்துபோவாரும், அவன் மனைவி மக்கள் முதலியோரைப் பழிதூற்றித் திரிவாரும், ஆசிரியனுக்கு மாறுபட்டு அவனோடு எதிர்மொழி பேசுபவரும் ஆசிரியனைப் பழித்தவர்க்கினமான மிகைத்தீவினையாளர் ஆவர்.

(வி - ம்.) ஆரியன் - ஆசிரியன். இடர் - வறுமை. முதலியன. தணத்தல் - பிரிந்துபோதல். இகலி - மாறுபட்டு.

(231)

 ஐந்தெனப் படுமா பாதக மவைதா
           மருமறை யாய்ந்தவந் தணனைச்
 சிந்துற வடர்த்த றேறல்வாய் மடுத்தல்
           செம்பொனைக் கரந்தனர் வௌவல்
 கொந்தெழிற் குரவன் மனைவியைக் கலத்தல்
           கோடுமிவ் வினைஞரைக் கூடல்
 இந்தவல் வினையின் மருங்கியல் வினையு
           மிவற்றினு ளடங்குவ மாதோ.

(இ - ள்.) இனி, பெருந்தீவினைகள் ஐந்தென்று கூறப்படும், அவையாவன : - அரிய மறைகளை ஓதியுணர்ந்த அந்தணனை உயிர் ஒழியக் கொல்லுதலும், கள்ளுண்ணலும், அந்தணருடைய பொன் முதலியவற்றை வஞ்சித்துக் கவர்ந்து கோடலும், திரண்ட அழகையுடைய ஆசிரியன் மனைவியைச் சேர்தலும் கொடிய இத்தீவினையாளரோடு