| நட்புக்கோடலும் என்னுமிவையாம். இந்தப் பெருந்தீவினைக்கினமான வினைகளும் உள; அவையும் இவற்றுள் அடங்கும் தீவினைகளேயாம். (வி - ம்.) மாபாதகம் ஐந்தெனப்படும் என்க. தேறல் - கள். கொந்து - கொத்து. அழகெல்லாம் ஒருவழித்திரண்ட என்றவாறு. கோடுதல் - வளைதல். மாதும், ஓவும் : அசைகள். (232) | | வெகுளியா தியின்வே தியர் தமைவைதல் | | | சபையிடை மேதையர்ப் பழித்தல் | | | அகனுறத் தன்னை மதித்தலா ரியனோ | | | டிகறனீர் நுகர்ச்சியிற் படரான் | | | பகவிடை விலக்கல் பகர்ந்துபின் கொடாமை | | | பார்த்திபன் செவிபிறர் குறையைப் | | | புகறன்முக் கணனா தியர்நிலம் பறித்தல் | | | ஆதிபூ சுரர்க்கொலைக் கினமே. |
(இ - ள்.) சின முதலிய காரணங்களால் அந்தணரை வைதலும், அவையிடத்தே பேரறிவுடையோரைப் பழித்தலும், செருக்குமிகும்படி தன்னைத் தானே மதித்துப் புகழ்ந்து கோடலும், நல்லாசிரியனோடு பகை கோடலும் காம நுகர்ச்சியிற் செல்லும் ஆன் விலகும்படி விடையை விலக்கலும், தருவேன் எனக் கூறிப் பின்கொடாமையும், பிறர் குற்றங்களை அரசன்பாற் சென்று கூறுதலும், சிவன் முதலிய இறைவர்க்குரிய நிலங்களைக் கைப்பற்றிக் கோடலும், இன்னோரன்ன பிறவும் அந்தணனைக் கொன்ற பெருந்தீவினைக் கினமாகும். (வி - ம்.) வெகுளியாதி என்புழி - ஆதி என்றது வெறுப்பு அவா அச்சம் முதலியன கொள்க. அகம் - ஈண்டுச் செருக்கு. (233) | | மறைபயின் றொழித்தல் வளரெரி விடுத்தல் | | | இருமுது குரவர்சொன் மறுத்தல் | | | அறவரே தோழ ரிவர்க்கஞ ருறுத்தல் | | | அறம்விலக் கியபொரு ணுகர்தல் | | | நெறிபதி தொழுவ நெடிபடு கானில் | | | நெருப்பிடன் மிருகங்கள் வருத்தல் | | | பறைதரா விழிசொல் பறைந்ததாத் தெளியப் | | | பறைதல்கண் ணுகர்வினைக் கினமே. |
(இ - ள்.) வேதாகமங்களை ஓதிப் பின்னர் ஓதாது விடுத்தலும், வளர்த்தற்குரிய தீயினை ஓம்பாது விடுதலும், தாய்தந்தையர் சொல்லை மறுத்தலும், அறவோரையும் நண்பரையும் துன்புறுத்தலும், அறநூல்கள் விலக்கிய ஊன் முதலியன உண்ணலும், வழிகளினும் ஆன் தொழுவத்தினும் சிள்வீடு கறங்கும் காட்டினும் தீக்கொளுவுதலும், |