| விலங்குகளைத் துன்புறுத்தலும், சொல்லப்படாத சொல்லை ஒருவன் கூறினான் என்று அறவோர் அவையிடைச் சான்று கூறுதலும் கள்ளுண்டற்கு இனமான பெருந்தீவினைகளாம். (வி - ம்.) இருமுது குரவர் - தாய்தந்தையர். அறவோர் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். அஞர் - துன்பம். அறம் : ஆகுபெயர். பறைதல் - கூறுதல். (234) | | வறியவ ருறையுள் வளநிதி கரிதேர் | | | வாம்பரி களமர்பன் மணியும் | | | செறியிலைத் தெங்கு கமுகுதாற் றரம்பை | | | தீங்கழை செந்நெலா திகளும் | | | வெறிகமழ் சந்தங் குங்கும மாதி | | | விரைகளு முடையணி யினமும் | | | முறிவில்பல் பண்டக் கலன்களுங் கவர்தன் | | | முந்துபொன் கவர்வினைக் கினமே. |
(இ - ள்.) நல்கூர்ந்தார் முதலியோருடைய இல்லமும், வளமுடைய பொருளும், யானை, தேர், தாவுகின்ற குதிரை, வினையாளர், பலவாகிய மணிகள் முதலியவற்றையும், செறிந்த ஓலையினையுடைய தென்னை, கமுகு, குலைவாழை, இனிய கரும்பு, சிவந்த நெல் முதலியவற்றையும், மணங்கமழும் சந்தனம், குங்கும முதலிய மணப்பொருள்களையும், ஆடை அணிகலன்களையும், கேடில்லாத பிற உடைமைகளையும், கவர்ந்து கோடல் முற்கூறப்பட்ட பொன்கவர் பெருந்தீவினைக்கினமாகிய தீவினைகளாம். (வி - ம்.) வளநிதி கரிதேர் முதலியனவும் கூறிய குறிப்பால் வறியவர் முதலியோர் என்க, தெங்கு - தென்னை. வெறி - மணம். விரை - மணப்பொருள் ; ஆகுபெயர். பண்டக்கலன் என்றது. பாண்டம் முதலியன. (235) | | கொடைக்குரி யவரைப் பெற்றுமீ யாது | | | குமரியை இல்வயிற் செறித்தல் | | | படைக்கணில் லவடன் துரிசறிந் தோர்ந்து | | | பயிறனீத் தவர்மனை புதல்வன் | | | தொடைக்குரி மருகி யுடன்பிறந் தவளைத் | | | தூமொழிப் புதல்வியை முயங்கல் | | | கடைப்புலை மகளைக் கலத்தலுங் குரவன் | | | காதலாட் புணர்வினைக் கினமே. |
(இ - ள்.) மணஞ்செய்து கொடுத்தற்குத் தகுதியுடைய மணமகனைப் பெற்றிருந்தும் கன்னியை அவனுக்குக் கொடாதே வாளா வீட்டினுள் அடைத்து வைத்தலும், வாள்போலும் கண்ணையுடைய தன் மனைவியின் தீயொழுக்கத்தை அறிந்து தெளிந்திருந்தும் பின்னும் |