| அவளோடு வாழ்தலும், துறந்து போய்விட்டவர் மனைவியையும், தன் புதல்வன் தொடுதற் குரியவளான மருகியையும், உடன்பிறந்தாளையும் தூய மொழியையுடைய தன்மகளையும் புணர்தலும் கீழான புலைச்சியைக் கூடுதலும் ஆகிய இத்தீவினைகள் ஆசிரியன் மனைவியையும் புணர்தலாகிய பெருந்தீ வினைக் கினமாம். (வி - ம்.) கொடைக் குரியவர் என்றது உருவானும் திருவானும் குலத்தானும் அகவையானும் தகுதியுடைய மணமகனை. குமரி - கன்னி. படை - வாள்; வேலுமாம். துரிசு - அயலானைச் சேர்தல். நீத்தவர் மனை என்றது. கணவன் துறவியாய் விட்டமையால் தனித்திருப்பவளை. தொடை - தொடுதல். மாலைசூட்டுதற்குரிய எனினுமாம். மருகி - மகன்மனைவி. (236) | | மிறைதரு முபபா தகம்பல வவையும் | | | விளம்புது மெய்த்தவ வறிக | | | மறையவர்க் கமைத்த பொருள்பெரி யவர்த | | | மாண்பொருள் கவர்தலன் னவற்றைப் | | | பறைதரப் பிறராற் கெடுத்தனற் குலத்தாற் | | | பயிலறி வருளினாற் றருக்கல் | | | நிறைதவத் தினரை வெகுளுத லெள்ளல் | | | நீத்திடல் செய்ந்நன்றி கோறல். |
(இ - ள்.) மெய்யான தவவொழுக்கமுடைய அகத்தியனே ! இனி மூன்றாவதாகிய இனத்தீவினைகள் தாமும் பற்பலவாம்; அவற்றையும் கூறுதும் உணர்ந்து கொள்க! அந்தணர்க்கென்று அமைத்த பொருளும், சான்றோர் தம் மாட்சிமையுடைய பொருளும் ஆகிய இவற்றைக் கவர்ந்து கோடலும், அந்தப் பொருள்களை ஏதிலாரைக்கொண்டு அழியும்படி கேடுசூழ்தலும், குலம் பெரியேம்! கற்ற அறிவு பெரியேம் ! அருளினிற் பெரியேம் ! என்று தம்மைத்தாமே மதித்துச் செருக்குறுதலும், நிறைந்த தவவொழுக்கமுடையோரைச் சினத்தலும், இகழ்தலும், அவர் நட்பைவிடலும் செய்ந்நன்றி கொல்லுதலும். (வி - ம்.) மிறை - குற்றம்; துன்பமுமாம். பறைதருதல் - அழிதல். துறவோர் கேண்மையை நீத்தல் என்க. கோறல் - ஈண்டு மறத்தல் என்க. (237) | | இறப்பவுங் காமப் புணர்ப்புறல் வறிது | | | மீத்துறா தீட்டலே வேட்டல் | | | சிறப்பறு வஞ்சம் வயிரமுங் கோட | | | றீமுனர் மணந்தவ ளிருப்ப | | | நறக்குழன் மகளிர் நன்னல முண்டு | | | நாணறல் கற்புடை யவளைப் | | | பெறத்தகு மெளிய ளென்றெண லவடோள் | | | பிணைதர வலித்தல்கட் புணர்ச்சி. |
|