பக்கம் எண் :

510தணிகைப் புராணம்

(இ - ள்.) மிகையாகக் காமநுகர்ச்சியில் ஈடுபடுதலும், ஒருசிறிதும் வறியவர்க்கு ஈயாதே பொருளீட்டிக் குவித்தலும் பேராசைப்படுதலும் சிறப்பில்லாத வஞ்சனையையும் செற்றத்தையும் மேற்கோடலும், தீயின் முன்னிருந்து திருமணஞ் செய்துகொண்ட இல்லாளிருக்கவே, ஏனைய தேன்மணக்கும் கூந்தலுடைய மகளிரைக் கூடி நாண மற்றுப் போதலும், கற்புடைய குலமகளைப் பொன் முதலியன கொடுத்துப் பெறுதற்குரிய எளியளாகக் கருதுதலும் அவளுடைய தோளைத் தழுவ முயலுதலும் புணர்வான் போன்று கருதிக் கண்ணால் கூர்ந்து நோக்குதலும்.

(வி - ம்.) இறத்தல் - மிகுதி. வறிது - சிறிது. வேட்டல் - ஈண்டு பேராசைப்படுதல். வயிரம் - பகைவர்பாற் கொள்ளும் இகல். வரைவின் மகளிர் என்பார் நறக்குழன் மகளிர் என்றார். கட்புணர்ச்சி - கண்ணாலே மகளிர் அழகை நுகர்தல்.

(238)

 பழியறு கன்னிக் கிழிவெடுத் துரைத்தல்
           பருவநல் லறிவுடை யவளைக்
 கழியமெய் யுணர்ந்தாற் கன்றிமற் றொருவர்
           களித்தல்கண் டிடுமண மெட்டின்
 இழிவறு பிரம மாதியைந் தன்றி
           யேனைய மன்றலிற் புணர்தல்
 அழிதன்மா லையவென் றறத்துறந் தவரை
           யாடக மாதிசென் றிரத்தல்.

(இ - ள்.) குற்றமற்ற கன்னிக்குப் பழிச்சொல்லைப் படைத்துக் கூறுதலும் பருவமும் அதற்கேற்ற வுணர்ச்சியும் உடைய கன்னியை நன்கு மெய்யுணர்ச்சி கைவரப்பெற்ற அந்தணனுக்கன்றி ஏனையோர்க்குத் தானஞ் செய்தலும், உலகிலே காணப்படும் எண்வகை மணங்களுள் வைத்து குற்றமற்ற பிரமமண முதலிய ஐந்துவகை மணத்தாலன்றி ஏனைய இழிந்த மூன்றுவகை மணமுறையாலும் மகளிரைக் கூடுதலும் யாக்கை முதலியன நிலையுதலில்லாதன என்றுணர்ந்து துறந்துவிட்ட பெரியோர்பாற் சென்று பொன் முதலிய இரத்தலும்.

(வி - ம்.) பிரமமாதி ஐந்து - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம் என்பன. ஏனைய மூன்று - ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்பன.

(239)

 தளர்விடை யூற்றிற் பதியினை நீங்கல்
           சகியினைத் தணத்தனற் குணரைக்
 கிளைஞரைத் தரும முடையரைப் பதியைக்
           கேழில்வீ ரரைவசி யர்களை
 அளிதரு பசுவைத் தனக்கெனத் தருவை
           யாலயத் தருக்களைக் கோறல்