| | துளிமது மலரைத் தனக்கெனக் குற்றல் | | | துரிசினர் கைப்பொரு ளிரத்தல். |
(இ - ள்.) நெஞ்சந் தளர்தலுக்குக் காரணமான அல்லல் வந்துற்றபொழுது தலைவனை விட்டுப்போதலும், நண்பனைப் பிரிதலும், நற்குணமுடையோரையும், உறவினரையும், அறப்பண்புடையோரையும், தலைவனையும், ஒப்பில்லாத வீரரையும், வணிகரையும், பாதுகாத்தற்குரிய ஆன்களையும், தமக்காகப் பழுமரங்களையும் கோயில் மரங்களையும் கொல்லுதலும், தேன் துளிக்குமலர்களைத் தமக்காகப் பறித்தலும், தீவினையாளர்பாற் பொருள் இரத்தலும். (வி - ம்.) தளர்வு - வறுமைக்கு ஆகுபெயர் எனினுமாம். பதி - தலைவன். சகி - நண்பன். கேழ் - உவமை. கேழில் பரம்பொருள் என்புழியும் இப்பொருட்டாதல் உணர்க. தனது நலங்கருதித் தருக்களை கோறலும் மலரைப் பறித்தலும் என்க. (240) | | கண்ணுதற் பரமன் றிருப்பணிக் குரியார் | | | கவையடி யான்முதல் கவர்தல் | | | அண்ணல்பூ சனையின் பயின்றனைத் தான்செய் | | | அருந்தடா கத்தினைப் பொழிலை | | | நண்ணிய மனையைப் புதல்வரை விற்றல் | | | நல்லன தீயன பயத்தல் | | | புண்ணிய பாவ மெனத்தெரி கல்லாப் | | | பொத்தினைப் பூசுரன் படுதல். |
(இ - ள்.) நெற்றிக்கண்ணுடைய இறைவன் திருப்பணி செய்யும் அடியவரையும், அவன் கோயிற்குரிய கவர்த்த குளப்படியினையுடைய ஆன் முதலியவற்றையும், கவர்ந்துகோடலும், இறைவன் வழிபாட்டால் எய்திய பயனையும், தான் அகழ்ந்த அரிய குளத்தினையும், வளர்த்த பூம்பொழிலையும் தன்னைச் சேர்ந்த மனைவியையும் மக்களையும் விற்றலும், அந்தணன் நன்மையும் தீமையும் நிரலே ஒருவனுக்கு எய்துவித்தல் அவன் முற்செய்த அறமும் மறமுமே என்றுணரமாட்டா மடமையை உடையனாதலும். (வி - ம்.) கண்ணுதற் பரமன் என்றாரேனும் தெய்வத்திருப்பணி எனப் பொதுவிற் கொள்க. அண்ணல் - இறைவன். பூசனைப்பயனைப் பிறர்பாற் பொருள்பெற்று நீரோடு வழங்குதல் என்க. அந்தணன் கல்லாமை தீவினை என்றவாறு. (241) | | தருவலென் றேற்ற பொருள்கொடா தொழிதல் | | | தருகுவல் பாகமென் றொருவர் | | | இருநிலம் விளைத்து முழுவதுங் கோட | | | லில்லவ ளணிகல மழித்தல் |
|