| | விரதியர் பொருளை நயந்தனர் கோடல் | | | வினைதபத் தரும்பொருள் வாங்கல் | | | பரவுறு வசிய மாதியிற் செம்பொன் | | | பற்றல்வில் லாதன விற்றல். |
(இ - ள்.) பின்னர்த் தருவேன் என்று கூறி ஏற்றுக்கொண்ட கடனைக் கொடாது விடுதலும், பிறர்க்குரிய நிலத்தினை வாரங்கொடுப்பல் என்று விளைவித்து வாரங்கொடாமல் விளைபயன் முழுதையும் எடுத்துக் கொள்ளுதலும், மனைவியின் அணிகலன்களை அழித்துவிடுதலும், நோன்பினர் பொருளை விரும்பிக் கவர்ந்து கொள்ளுதலும், தீவினைக்குக் கழுவாயாக ஒருவன்தரும் தானப்பொருளை ஏற்றலும், பிறராற் புகழப்படுகின்ற வசியமந்திர முதலியன செய்து பொருளீட்டலும், விற்கத் தகாத சோறு முதலியன விற்றலும். (வி - ம்.) பாகம் - பகுதிப்பொருள். இல்லவள் - மனைவி. வினை - தீவினை. தப - கெட. வசியமாதி எனக் கூறியதனால் ஏனை ஆகருடணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்பனவும் கொள்க. வில்லாதன - சோறு முதலியன; அரிசி விற்றிடும் அந்தணர்க்கோர் மழை என்பதுங் காண்க. (242) | | புகழினைக் குறித்து நியதிகைக் கோடல் | | | பொருள்களான் மறைமுதல் கொள்ளல் | | | திகழ்நடம் வினோத மாதிய மதித்துத் | | | திரிதனற் சமயநின் றவர்கள் | | | இகழ்பசு நூலை வழியெனப் பயிற | | | லிரும்பொரு ளேற்றுநூல் பயிற்றல் | | | நிகழ்தரு மவலத் தருக்கமே யறைதல் | | | படிமத்தைப் பரித்துநீத் திடுதல். |
(இ - ள்.) அன்பானன்றிப் பிறர் தம்மைப் புகழவேண்டுமென்று கருதியே நியதியை மேற்கொள்ளுதலும், பொருள் கொடுத்து மறை முதலியவற்றைக் கொள்ளுதலும் அழகு திகழும் கூத்தும் வேடிக்கையு மாகியவற்றை நன்குமதித்துக் காண்டலும், சைவசமயநெறி நிற்போர் பசுநூல் என்றிகழாநின்ற புறச் சமயநூல்களை வழிநூல் என்று பிதற்றிப் பயில்தலும், பெரும்பொருள் பெற்றுக்கொண்டு ஞானநூலை ஓதுவித்தலும் துன்பமே நிகழ்தற்கிடமான வீண் தருக்கம் பேசுதலும், மேற்கொண்ட நோன்பினை இடையிலே விட்டுவிடுதலும். (வி - ம்.) நியதி - நாட்கடன். வினோதம் - வேடிக்கை நற்சமயம் என்றது சுத்த சைவசித்தாந்த சமயத்தை. பசுநூல் - உலோகாயத நூல்; பிற உலகவியல் நூல்களுமாம். படிமம் - நோன்பு. "படிம வுண்டிப் பார்ப்பன மகனே" என்புழியுங் காண்க. (243) | | வானவ ரெறிமந் திரமது கொடுத்த வரதரை யோம்புறா திகத்தல் | | | ஆனரு மறையோ ரறவரைப் பிழைத்த லரசனுக் கிழிப்புரை கிளத்தல் |
|