பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்51

(இ - ள்.) தெளிந்த நீரையுடைய தடாகங்களில் தோன்றப்பட்ட நீலமணி போலும் நிறத்தையுடைய கமுகுகளின் மிடறொடியும் வண்ணம் தழைத்தமடல் வாய் விரியாத மெல்லிய பாளையின் நிழலை அச்சத்தைத் தரும் முதலையென்று பயந்து அழகிய மலர்களை யுண்ணாது செல்கின்ற எருமைக்குப்பின்னே சிறையினையுடைய அன்னக்கூட்டங்களானவை திணிந்த இருளைத் துரத்திச் செல்லா நின்றசந்திரனைப்போலத் திண்ணிய முலைகளானொழுக்கப்பட்ட இன்சுவையுடைத்தாகிய பாலையுண்டு செல்வனவாம்.

(வி - ம்.) மணி - நீலமணி; கலித்த - எழுந்த, துணி; தெளிவு ..... சிலப்பதிகாரம்; சூர்த்த - அச்சந்தருகின்ற, வன்மீன் - முதலை - பயன் - பால். ஓடுமியல்பின்றி நிலையாக விருக்கும் புனலைத் துணிபுன லென்பாருமுளர்; இது மயக்கவணி.

(83)

 தெளிபுன லுகுத்துத் தங்களைப் புரக்குஞ்
           செய்ந்நன்றி மதித்துவர் பருகும்
 அளிமுகிற் குலத்துக் கருஞ்சுவை யிளநீ
           ரளிக்கிய விழைந்தன போலும்
 வளிவழக் கழுங்க மிடைந்துபல் குலைகண்
           மடலிறக் கான்றுபூம் பாளைக்
 குளிர்மணங் கஞற்றி நிழன்றுவா னோங்கிக்
           குயின்குழாந் தைவருந் தாழை.

(இ - ள்.) காற்றியங்கல் தடைபட நெருக்கமுற்றுப் பல குலைகள் பாளைகள் மடலொடியும்படி ஈன்று பொலிவு பெற்ற பாளைகள் குளிர்ந்த வாசனையை யெழுப்பி நிழலைச் செய்து ஆகாயத்திலுயர்ந்து மேகக்கூட்டங்களைத் தடவுவனவாகிய தென்னை மரங்கள், தெளிந்த மழையாகிய புனலைச் சிந்தித் தங்களைப் பாதுகாக்கின்ற அச்செய்ந்நன்றியைக் கருதிக் கடலையுண்ணுகின்ற (உயிர்கண்மாட்டுக்) கருணையையுடைய மேகக்கூட்டத்திற்கு அருமையான சுவையினையுடைய இளநீரைக் (கைம்மாறாகக்) கொடுக்க விரும்பின போலும்.

(வி - ம்.) அளிக்கிய - அளிக்க; எச்சத்திரிபு; அழுங்க - கெட; கான்று - வெளியிட்டு; கான்றல் - தொங்குதல்; கஞற்றி - நெருங்கச் செய்து; நிழற்றி - நிழல் செய்து; தாழை - தென்னை; குயின் - மேகம்; உவர்பருகுமுகில் அளிமுகில் எனத் தனித்தனி சென்றியையும்; இது தற்குறிப்பேற்றவணி.

(84)

 சிறையளிக் குலங்கண் முரன்றலர் தோறுஞ்
           செல்லுவ திவவியா ழெழுப்பி
 நறைமலர் தொறும்வே றிறைகொளுந் தேவர்
           நயப்புற வின்னிசை மிழற்றி
 நிறைவரங் கிடைத்துப் போதுமெய் யடியார்
           நிகர்தரு நந்தன வனங்கள்
 பொறையுயிர் தாது குவிவன வவற்றைப்
           பொழிமதுப் பெயர்ப்பன பணைக்கே.