(இ - ள்.) சிறையினையுடைய வண்டினங்கள் இசை பாடிக்கொண்டு பூக்கடோறுஞ் செல்வன முறுக்காணியையுடைய யாழின் இசையை இசைவித்து வாசனையையுடைய பூக்கடோறுந் தனித்தனி யெழுந்தருளியிருக்கும் தேவர்கள் இன்பமடைய இசையைப்பாடி (அத்தேவர் பால்) கருதிய நிறைந்த வரங்கள் கிடைக்கப் பெற்றுச் செல்லும் அடியார்களை நிகர்தரப்பெற்ற நந்தனவனங்களால் வெளியிடுகின்ற மகரந்தங்கள் குவிவனவாம். (அங்ஙனம் குவிவனவாகிய) அம் மலர்ப்பொடிகளை (அந்நந்தனவனங் கொட்டுகின்ற) தேன் பெருக்கு வயல்களிடத்துப் பெயர்த்துச் சேர்ப்பனவாகும். (வி - ம்.) ஒவ்வொரு மலரினும் தனித்தனி தேவர்களிருத்தலைப் புட்பவிதி யென்னும் நூலிற் காண்க. செல்லுவ சிறையளிக்குலமென மாற்றுக; திவவு - முறுக்காணி; வேறிறை கொளல் - ஈண்டுத் தனித் தனியாகத் தங்குதல்; நிகர்தரு நந்தனவனங்களென்பது நிகர்பெற்ற நந்தனவனங்களெனச் செயப்படு பெயராய் நின்றது; இஃது உவமையணி. (85) | | மங்கையர் தடந்தோள் வடிவமு மதர | | | வனப்பும்வா லெயிற்றுநீர்ச் சுவையும் | | | தங்கிய நலத்தாற் றளைதொறு முழவர் | | | தலையளி புரிவன கரும்பர் | | | அங்கவை குழைய வணக்குநா ணாக | | | வயலெலா மடர்வன சுரும்பர் | | | பங்கமெங் கணும்வே ளெய்கணை யாகப் | | | பரம்புவ தாமரை யரும்பர். |
(இ - ள்.) வயல்கடோறும் உழவர்களால் கரும்புகள் தத்தந் தலைவிமார்களின் பெரிய தோளின் வடிவமும் உதடுகளினழகும் பல்லினின்றும் ஊறிய நீரின் சுவையுந் தங்கப் பெற்றிருத்தலால் தலையளி செய்யுந் தன்மையுடையனவாம்; அவ்வயலின் பக்கங்களிளெல்லாம் வண்டுகள் அக்கரும்புகளை வருந்த வளைக்கும் நாணாக நெருங்குவனவாம்; தாமரையரும்புகள் எங்கணுமுள்ள சேற்றில் மன்மதனெய்யும் கணை விரிந்துகிடப்பனவாம். (வி - ம்.) தளை - வயல்; தோளும், அதரமும், வடிவமும் வண்ணமும் பற்றி வந்த உவமமாகக்கொள்க; குழைய - வருந்த; பங்கம் - சேறு; பரம்புவ - விரிந்துகிடப்பன; அயல் - பக்கம்; அடர்வன - நெருங்குவன; (86) | | இரவெலாங் கணவன் கலவியிற் றிளைத்த | | | விருநில மடந்தையக் கலப்பின் | | | விரவுசெந் நிறத்த விழிகளுந் தந்த | | | விழுக்குறி யிதழ்க்கனி வாயும் | | | பரர்விழிப் படுத்தற் குள்ளக நாணிப் | | | பாணியான் மூடிய தேய்ப்ப | | | வரமலர்க் கழுநீர் குமுதமுன் பகலின் | | | மலர்முகங் குவிவன வயல்கள். |
|