| யுடைய பார்ப்பனர், துறவோர், நட்டோர், கன்னியர், ஆன் என்னு மிவர்க்கும் இவர் தொழிலுக்கும் இடையூறு மிகச் செய்தலும் நெஞ்சத்தைப் பொறாமையிலே அழுத்தி நிறுத்துதலும் மகளிர்க்குப் பழியுண்டாக்கி நிலைநிறுத்துதலும். (வி - ம்.) "விருந்துபுறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று" என்னும் அருமைத் திருக்குறளையும் ஈண்டு நினைக. தமிழ்முனி - அகத்தியன். பசுவினை : மேய்தல், நீருண்ணல். (246) | | எரிவளர் சாலை கோயிலா னிலைநீ ரெறிகுளம் வீதிவெற் பீமம் | | | விரிமலர் நந்த வனந்தரு நீழன் மேடவல் சிலைவிளை நிலமெய் | | | தெரிதவர் வளாக முவர்நில முறையு டிருநதி யறுகுபைந் தும்பை | | | நெரிநிலம் வழிவன் மீகமற் றிவற்றி னிருவகை யியக்கமு நீத்தல். |
(இ - ள்.) வேள்வி மண்டபம், திருக்கோயில், ஆன்தொழுவம், நீரலை எறியும் குளம், வீதி, மலை, நன்காடு (சுடுகாடு), மலர்விரியும் பூம்பொழில், மரநீழல், மேடு, பள்ளம், கல், விளைந்துள்ள வயல், துறவோர் உறையுள், உவர்நிலம், இல்லம், அழகிய யாறு, அறுகம்புல், பசிய தும்பை முதலியன நெருங்கிய நிலம், நடைவழி, புற்று என்னுமிவற்றில் மலமூத்திரம் விடுதலும். (வி - ம்.) நந்தவனம் - பூம்பொழில். தவர் - துறவோர். நெரிநிலம் - வினைத்தொகை. வன்மீகம் - புற்று. (247) | | பிறர்நிதி வேந்தன் றனக்குறக் காட்டல் | | | பேனநீர் தனில்விளை யாடல் | | | உறவிகல் கடந்தோர்க் குறுகுல மாதி | | | யாய்தலொண் வழியிடை தடுத்தல் | | | மறலிய வழக்கிற் றெளித்தசொல் சொலாமை | | | மாற்றல னுயிர்கரந் திறுத்தல் | | | தெறல்வினைத் தூண்டி லாதிய செய்தல் | | | செயுமவை கோடல்பொய் கிளத்தல். |
(இ - ள்.) மறைவாகப் பிறர் வைத்திருக்கும் பெரும்பொருளை அரசனுக்கு நன்கு காட்டுதலும், நுரையுடைய நீரின்கண் விளையாடுதலும், உறவும் பகைமையும் கடந்த துறவோருடைய குலமுதலிய வற்றை ஆராய்தலும் ஒள்ளிய வழியை இடையிலே அடைத்தலும், இருவர் மாறுபட்ட வழக்கின்கண் தான்தெளிந்த சொல்லைச் சொல்லாமையும், பகைவன் உயிரை மறைந்திருந்து கொல்லுதல் கொலைத் தொழிற்குரிய தூண்டில் வலை முதலியன செய்தலும், பிறர் செய்துள்ள அவற்றை வாங்கிக் கோடலும் பொய் கூறலும், (வி - ம்.) பேனம் - நுரை. மறலுதல் - மாறுபடுதல். தெளித்த சொல் என்றது சான்றாஞ் சொல்லை. தெறல் - கொல்லுதல். (248) |