பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்515

 ஆருயிர் மயங்க மருந்திட லதிதி யாதியோர் பசிமுத லொறாமை
 வாரமற் றடியர் பாலிரங் காமை மற்றுமத் தொழும்பரை யொறுத்தல்
 பேருறு வருண நிலையிவை சிதைத்தல் பெருநிலத் துயிர்தப நடத்தல்
 சீரிய சுற்றம் வேந்தனா தியர்க்குஞ் செயிர்வினை முடித்திடக் கருதல்.

(இ - ள்.) உயிரினங்கள் மயங்கும்படி நச்சு மருந்திடுதலும் விருந்தினர் முதலியோர் பசியகற்றாமையும், அன்பற்று அடியவர்க் கிரங்காமையும், மேலும் அடியவரை வருத்துதலும், புகழ் உறுதற்கிடமான வருணநிலையினை அழித்தலும், நடக்கும்பொழுது எறும்பு முதலிய சிற்றுயிர் அழியும்படி நடத்தலும், சிறந்த உறவினர்க்கும் அரசன் முதலியோர்க்கும் கேடுதரும் தொழிலைச் செய்துமுடிக்க நினைதலும்,

(வி - ம்.) மருந்து - நஞ்சுகலந்த மருந்து. ஒறாமை - அகற்றாமை. வாரம் - அன்பு. தொழும்பர் - பணியாளர். வருணம் - அந்தணர் முதலிய வகுப்புகள். செயிர்வினை - தீவினை.

(249)

 ஆவினை யினத்தி னீக்கலான் பிணியை
           யகற்றுதல் செயாமையா னேறு
 நோவவன் பீச முடைத்தலவ் விரண்டி
           னோன்சுமை யுறுத்தல்வே தியர்க்குத்
 தாவினை யுஞற்றன் மதுமண் மோத்தல்
           தரணிகா வலனெனப் பிறந்தும்
 தேவர்கட் கவியூண் கொடாமைமூத் தவர்நோய்
           செறிநரா தியர்க்கிரங் காமை.

(இ - ள்.) ஆவை அதன் இனத்தினின்று பிரித்தலும், ஆவிற்குற்ற பிணியை மருந்து முதலியவற்றால் அகற்றாமையும், எருது நோவும்படி அதன் விதையை நெரித்தலும் அந்த ஆன் எருது இரண்டினும் வலிய சுமையை ஏற்றுதலும் பார்ப்பனர்க்குக் கேடு சூழ்தலும், கள்ளின் நாற்றத்தை விரும்பி நுகர்தலும், அரசர்குடியிற் பிறந்து வைத்தும் தேவர்க்கு அவியுணவுநல்கும் அறக்கள வேள்வி செய்யாமையும், முதியோர் நோய்வாய்ப்பட்டோர் முதலியோர்க்கு இரங்காமையும்,

(வி - ம்.) இனம் - விடை நிரையுமாம். ஆனேறு - விடை, காளை - பீசம் - விதை, இரண்டும் - ஆனும் ஏறும். தா - தீமை.

(250)

 ஊனுண வெண்ணல் கொலையதற் கிரக்க
           முறாமைமற் றிடைவிலக் காமை
 ஏனைய விழிவுஞ் செய்யவஞ் சாமை
           யிறுத்திடப் பிறவுயிர் வளர்த்தல்
 ஆனவர்ச் சனையீ சன்பணி சிறிது
           மாற்றிலே மெனவிரங் காமை