பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்517

(இ - ள்.) தெளிந்த ஒள்ளிய அறிவுடையோனே! பால், தயிர், வெண்ணெய், எண்ணெய், நீர், கூலம், பட்டு, நெடியசாமரை, குளிர்ந்த குடை, மணக்கும் ஊனாகிய தசை, சங்கு, பாய்விரித்தூரும் ஓடம், ஒளிமணி, இரும்பு, செம்பு முதலிய உலோகங்கள் என்னும் சிறப்பில்லாதனவாகிய இவற்றைச் சிறிதேனும் பிறற்பால் கொள்ளக்கூடாதன எனச் சான்றோரால் வெறுக்கப்பட்டன இவற்றையும் வஞ்சத்தாலே கொள்ளுதலும் தீவினைக்கின மென்றே கொள்ளுக.

(வி - ம்.) இவை எளிய பொருளாயினும் இவற்றையும் களவினாற் கொள்ளுதலும் தீவினையே என்றவாறு.

(253)

 ஆடவர் மகடூஉ மானிடர் தேவ ராகவிவ் வியற்றுறி னவ்வ
 பாடழி பயனைப் பயந்தலா தொழியா பார்த்திப னொறுத்திடப் பட்டோர்
 பீடுறு குரவன் மெய்யடி யவராற் பிரிந்திடப் பட்டவர்க் கெல்லாம்
 நீடுறு பயனெய் தாவினி யறம்பா வப்பய னிலைமுறை கிளப்பாம்.

(இ - ள்.) அகத்தியனே கேள்! ஆடவராக, மகளிராக, மனிதராகத், தேவராக, ஈண்டுக் கூறப்பட்ட தீவினைகளைச் செய்தவிடத்து அத்தீவினைகள் தத்தம் தீயபயனைப் பயந்தே விடுவதல்லது பயவா தொழியமாட்டா. இனி அரசனால் ஆராய்ந்து ஒறுக்கப்பட்டோரும். நல்லாசிரியனாலாதல் மெய்யடியாராலானாதல் கழுவாய் செய்யப்பட்டவர்கட்கு அவ்வத் தீவினைப்பயன் எய்தமாட்டா. இனி அறமறங்களின் பயன்களுடைய இயல்பினை முறையே கூறுவாம்.

(வி - ம்.) அவ்வ - அவ்வவற்றின். பிரித்திடல் - கழுவாய்செய்தல்.

(254)

வேறு

 அன்னநீர் செருத்தலா னாடையாதி பல்லவும்
 நன்னர்நெஞ் சுவப்புற நயந்தளித்து ளோர்களும்
 மன்னுமீச னாதியோரை வணக்கமுற்றி னோர்களும்
 என்னருந் தெனாதுதிக்கி னெய்திமே லியங்குவார்.

(இ - ள்.) அன்னம் நீர் பாற்பசு ஆடை முதலிய பல பொருள்களையும் சிறந்த பாத்திரமானவர்கள் தமது நன்மையுடைய நெஞ்சமகிழும்படி விரும்பி வழங்கியவரும், நிலைபெற்ற இறைவன் சிவயோகி முதலியோரை வழிபட்டு முதிர்ந்தோரும் அவர் போன்ற எத்தன்மை யுடையவரும் மறலியினுடைய தென்றிசைக்கு எய்தி மேற்செல்லுவார்.

          (வி - ம்.) செருத்தல் - மடி. என்னரும் - எத்தன்மை யுடையவரும்.

(255)

 இரதமாதி யூர்ந்துபல் லியமியம்ப வியவர்கள்
 விரசமந்த மாருதம் விராயியங்க நெறியெலாம்
 பரவுபல் வளத்தபோகம் பண்பினார்ந்து செல்லுறும்
 வரதர்தம்மை நடுவனு மகிழ்ந்தெதிர்ந்து தவிசுறீஇ.

(இ - ள்.) அன்ன முதலிய வழங்கிய அறவோர் தேர் முதலியவற்றை ஊர்ந்து பல்வேறிசைக் கருவிகளும் முழங்கவும், பணியாளர்