| சூழவும், மென்காற்று வீசாநிற்பவும் வழியெங்கணும் பரவிய பலவாகிய வளந்தரும் கனி முதலிய நுகர்ச்சிகளை இனிதுண்டும் செல்லா நிற்பர். இங்ஙனம் செல்லும் அறவோரைக் கூற்றுவன்றானும் மகிழ்ந்து எதிர்கொண்டழைத்துச் சென்று சிறந்த இருக்கையில் இருத்தி. (வி - ம்.) இயம் - இசைக்கருவி. விரச - சூழ. மந்தமாருதம் மென்காற்று. போகம் - நுகர்பொருள். வரதர் - வரந்தருதற்குரிய சிறப்புடையோர். உறீஇ - இருத்தி. (256) | | காதலோடு பூசனை கஞற்றிநீயி ரெம்பிரான் | | | வேதநீதி யாற்றினீர் விண்ணினின்ப மேய்ந்துமுன் | | | பாதகத்தி னெஞ்சிய பயனருந்த விவ்வயிற் | | | போதுகென்ன நன்றெனாப் போகபூமி யெய்துவார். |
(இ - ள்.) அன்போடு வழிபாடுசெய்து பெரியீர்! நீயிர் எம்பெருமானாகிய இறைவன் கூறிய வேதாகம முறைப்படி ஒழுகியுயர்ந்துளீர். ஆதலால் அந்நல்வினைப் பயனாகிய துறக்க வின்பத்தே பொருந்திப் பின்னர் நீயிர் பண்டு செய்து எஞ்சிக்கிடக்கும் (சஞ்சிதமாகிய) தீவினைப் பயனை நுகர்தற் பொருட்டு ஈண்டெய்துக என்றுகூற அவரும் நன்று நன்றென்று மகிழ்ந்து துறக்கவுலகம் புகாநிற்பர். (வி - ம்.) கஞற்றி - செய்து. விண் - துறக்கம். முன்பாதகத் தெஞ்சிய என்றது. முன்செய்து அத்துவாவிலே கட்டுப்பட்டுக் கிடக்கும் வினையின் பயன்களை. (257) | | என்றவெல்லை முனிவர னிறைஞ்சிவே லிறைவனை | | | ஒன்றுதான்வி னாவுவா னுதவினாரை யோதுழி | | | முன்றலைக்க ணன்னநீர் மொழிந்ததென்னை யென்றலும் | | | குன்றிறுக்கு மிளவலுங் குறுமுனிக்கி தருளுமே. |
(இ - ள்.) என்று திருவாய் மலர்ந்தருளிய அளவிலே அகத்திய முனிவன் வேலேந்தும் அக்கடவுளை வணங்கி ஒன்று வினவாநிற்பவன், எந்தாய்! ஈவோரைக் கூறத் தொடங்கியபொழுது முற்படச் சோறும் நீரும் கூறியருளியதன் கருத்தென்னையோ என்று வினவுதலும் குருகு பெயர்க் குன்றெறிந்த முருகப்பெருமானும் அவ்வகத்தியனுக்குப் பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளுவன். (வி - ம்.) முனிவரன் - முனிவர்கட்கு மேலானவன்; அகத்தியன். வேலிறைவன் - முருகன். குன்று - கிரௌஞ்சமலை. (258) வேறு | | பொருண்மிகு மூர்தி யாதி போக்கருங் கொடைகட் கெல்லாம் | | | பொருண்மிகா வன்னந் தெண்ணீர்ப் போக்கருங் கொடையே மேலாம் | | | பொருண்மிகு மூர்தி யாதி பூத்திடும் பயத்தி னூங்குப் | | | பொருண்மிகா வன்னந் தெண்ணீர் பூத்திடும் பயன்மேம் பாட்டால். |
(இ - ள்.) விலைமிக்க தேர் முதலியன வழங்கும் குற்றமற்ற கொடையினுங் காட்டில் விலைமிகாத சோறும் தெளிந்த நீரும் வழங்குதலாகிய |