| குற்றமற்ற கொடையே சிறந்ததாம் எற்றாலெனின், விலைமிக்க தேர் முதலியன நல்கும் பயனையும் காட்டில் உவ்விடத்தே விலைமிகாத சோறும் தெண்ணீரும் நல்கும் பயன் மேம்பாடுடையதாகலானும், (வி - ம்.) பொருள் - விலைப்பொருள். சோறும்நீரும் எண்பொருளே யாயினும் பயனாற் சிறந்தன என்றவாறு. போக்கு - குற்றம். ஊங்கு - இவ்வுலகில். பூத்தல் - வழங்குதன் மேற்று. (259) | | பிணிபல வவற்றுண் மேலாம் பிணிபசி யதன்பா லான | | | பிணிநறுந் தெண்ணீர் வேட்கை பிணியிவை யுயிர்கட் கெல்லாம் | | | தணிமருந் தன்னந் தெண்ணீர் சார்பசி யொழிவி னுண்டாம் | | | தணிவில்பல் வேட்கை நீக்கு மவையெலாந் தமக்குப் பின்னாம். |
(இ - ள்.) மானிடர் முதலிய சிற்றுயிர்களைப் பற்றும் நோய்கள் சாலப்பலவாம். அவையிற்றுள் தலைசிறந்த நோய் பசிநோயே யாகும். அந்நோயை அடுத்துத் தோன்றும் நோய் நறிய தெளிந்த நீரினைவேட்கும் வேட்கையே யாகும். இவ் விரண்டு நோயும் உடலோடுலாவும் எல்லாவுயிர்கட்கும் பொதுவும் ஆகும். இத்தலையாய நோய்களைத் தீர்க்கும் மருந்தாவன நிரலே சோறும் நீருமேயாம். உயிர்கட்குத் தம்மைச் சார்ந்த பசிநோய் தீர்ந்தவிடத்தே குறையாத பலவாகிய அவாக்கள் தோன்றாநிற்கும். அவ்வவாவானுற்ற நோய்களைத் தீர்க்கும் மருந்தாகிய பிறபொருட் கொடைகள் அனைத்தும் அக்கொடைக்குத் தாழ்ந்தனவே யாம். (வி - ம்.) பசிநோய் உற்றபொழுது ஏனைய ஆசையாகிய நோய்கள் தோன்றமாட்டா. இதனானும் பசிநோயே தலைசிறந்தது என்றவாறு. (260) | | உடலினை வளர்த்த லானு முடலினாற் கிளந்த வேனை | | | மடனிகு மறங்க ளெல்லாம் வளர்த்திட லானு நீத்தோர் | | | கடவுள ராதி யோரு முணவினைக் கருத லானும் | | | தொடர்தரு பல்லாற் றானுந் துப்பளித் திடுதன் மேலாம். |
(இ - ள்.) சோறும் நீரும் உடலை வளர்க்குமியல்புடையன ஆகலானும், அவ்வுடல் கொண்டே அறியாமை நீங்குதற்குக் காரணமான அறங்களை எல்லாம் வளர்த்திட வேண்டும் ஆகலானும், துவரத் துறந்தோரும் தேவருங்கூட உணவினை விரும்புதலானும் யாம் தொடர்பாக ஈண்டுக்கூறிய பல வழிகளானும் ஆராயுமிடத்தே உண்டி கொடுத்தலே உயர்வுடையதாகும் என்பதுணரலாம். (வி - ம்.) மடன் - அறியாமை. இகுதல் - கெடுதல். நீத்தோர் - துவரத்துறந்த துறவோர். கடவுளர் - அமரர். துப்பு - உணவு. (261) | | ஆதலா லன்னந் தெண்ணீ ரவற்றினை முன்னர்ச் சொற்றாம் | | | பூதவன் பரிணா மத்தைப் போட்டுநற் பூத சாரத் | | | தோதரு துறக்கஞ் செல்வோ ருறுமுறை தொகுத்தா மிப்பால் | | | பாதகர் பூத தேகம் படர்ந்துறு முறையுஞ் சொல்வாம். |
|