| (இ - ள்.) இங்ஙனமாகலின் சோற்றையும் நீரையும் முற்படச் சொன்னோம். ஐம்பூதங்களின் வலிய பரிணாமமாகிய இவ்வுடலை இறப்புழி ஈண்டே போகட்டுவிட்டு நல்ல பூதசார சரீரத்தோடு சொல்லுதற்கரிய துறக்கஞ் செல்லும் அறவோர் ஆண்டுச் செல்லுமியல்பினைத் தொகுத்துக் கூறினேம். இனித் தீவினையாளர் இறந்த பின்னர்ப் பூதவுடலோடு செல்லும் முறைமையும் சொல்லுவேம். (வி - ம்.) சொற்றாம் - சொன்னோம், பூதபரிணாமம் என்றது இவ்வுலகத்திற்குரிய பருவுடலை. பூதசாரம் - பூதசாரத்தாலியன்ற நுண்ணுடல். பூததேகம் என்றது நரகத்தை நுகர்தற்குரிய பூதசாரவுடலை. படர்ந்துறுதல் - ஒருசொல். (262) | | கருவிளங் குழவி பாலர் காளையர் விருத்த ராக | | | மருவுட னுகற்சி யற்ற மாத்திரை யறிந்து தென்பால் | | | தருமன தேவ லாளர் சார்ந்தனர் கொண்டு போத | | | வெருவுற நெறியின் முற்றும் வேதனை யனந்த கோடி. |
(இ - ள்.) கருவாகவாதல் பச்சிளங் குழவியாகவாதல் பாலகராகவாதல் காளையராகவாதல் முதியரேயாகவாதல் எப்பருவத்தினராயினும் அவரவர் எடுத்துள்ள இப்பருவுடல் நுகர்ச்சிக்கென முகந்துகொண்ட பிராரர்த்த வினைப்பயன்களின் நுகர்ச்சி தீர்ந்தபொழுதினை ஒருதலையாக உணர்ந்து கொண்டு தென்றிசைக்கண்ணுள்ள கூற்றுவனுடைய ஏவலர் வந்தெய்திப் பற்றிக்கொடு போம்பொழுது அவ்வுயிர்கள் அஞ்சும்படி அக்கொடு நெறியில் நுகர்ந்து தீர்க்கும் துன்பங்கள் எண்ணத்தொலையாத கோடியாம். (வி - ம்.) கரு - கருப்பத்திலுள்ள மகவு. விருத்தர் - முதியோர். நுகர்ச்சி - பிராரர்த்தவினை நுகர்ச்சி. சார்ந்தனர் - முற்றெச்சம். (263) | | சுழல்விழி யங்கி காலச் சுடர்ந்தெரி குஞ்சி பொங்கத் | | | தழனிமிர் திறலின் முற்றுந் தறுகண்வன் றூதர் கையில் | | | மழலைமென் கிள்ளை பூசை வாயகப் பட்டாங் கல்லாந் | | | துழலைபாய் மனத்தர் பாசப் பிணிப்பொடு முறுவர் சில்லோர். |
(இ - ள்.) தீவினையாளரிற் சிலர், சுழலாநின்ற கண்கள் தீக்காலவும் சுடர்விட்டெரிவது போன்ற தலைமயிர் பொங்காநிற்பவும் தீயினை ஒத்து ஓங்கிய ஆற்றலின்மிக்க வன்கண்மையுடைய வலிய கூற்றன் பணியாளர் கையில், மழலைச்சொற் பேசும் மெல்லிய கிளி பூனை வாயிலகப்பட்டாற் போன்று மயங்கிச் சுழலாநின்ற நெஞ்சத்தை யுடையராய் அவராற் கட்டப்பட்ட பிணிப்போடும் செல்லாநிற்பர். (வி - ம்.) சிலர் மனத்தராய்ப் பிணிப்போடுஞ் செல்லாநிற்பர் என்க. (264) | | கொடிற்றினைத் துளைத்துக் கோத்த கொடுந்தொடர்ப் பட்டுச் செல்வோர் | | | மிடற்றினை யிறுக்கி யாத்த வீசுபா சத்திற் செல்வோர். |
|