| (வி - ம்.) வியங்கோள் - ஏவல். இழுதையர் - தீவினைமாக்கள். முறையுளி என்புழி, உளி மூன்றாவதன் கருவிப் பொருள்படுவதோர் இடைச்சொல். மிறை - துயர். மோ - முன்னிலையசை. மாற்றம் - மொழி. (270) | | சித்திரக் குத்தற் கூவித் தீங்கெலாஞ் செப்பென் றேவிக் | | | கைத்தல நெல்லி போலக் கருத்தினு ளவர்க்குந் தோன்ற | | | மெத்திய பாவ மன்னான் விரித்தபின் கலுழற் கண்டு | | | பைத்தவி யரவ மென்னப் பதைப்புறு வாரை நோக்கி. |
(இ - ள்.) சித்திரக் குத்தன் என்னுந் தன் கணக்கனை அழைத்து இவர்கள் செய்த தீவினைகள் அனைத்தையும் சொல்வாயாக என ஏவியதனாலே அவனும் அத்தூதரும் அத்தீயோரும் கேட்கும்படி கையின்கண்ணுள்ள நெல்லிக்கனி போல நன்கு அவர்க்குத் தோன்றும்படி அவ்வுயிர் செய்த தீவினைகளை நன்கு விரித்துக் கூறுவானாக அவன் கூறியபின்னர்க் கருடனைக் கண்டுழிப் படத்தையுடைய நாகப்பாம்பு அதனைச் சுருக்கிக் கொண்டு பதைப்பது போன்று பதைக்கும் அத்தீவினையாளரை அக் கூற்றுவன் பார்த்து, (வி - ம்.) சித்திரக்குத்தன் - கூற்றனுடைய கணிவன். ஏவி - ஏவ என்க. அவர்க்கும் என்புழி உம்மை அத்தூதற்கேயன்றி அத்தீவினை யோர்க்கும் என்பதுபட வந்தது. கலுழன் - கருடன். பைத்து - பையையுடையது. (271) | | பொய்யெனப் போகு மாதர் போகமும் பொருளு மற்றும் | | | மெய்யெனக் கருதி வேத விதிதபப் பலவுஞ் செய்தீர் | | | மையவிர் மிடற்றெம் மண்ணன் மறைவழி யேது மில்லீர் | | | நையவீண் டணைந்தீர் பன்னா ணரகினுக் கிரையு மானீர். |
(இ - ள்.) பொய்யே என்று கூறும்படி இல்லையாய்ப் போகின்ற மகளிரின்பமும் அதற்கேதுவான பொன் முதலிய பொருளும் இன்னோரன்ன பிறவுமே உண்மையான உறுதிப் பொருள் என்று கருதிக் கொண்டு வேதாகம விதியினின்றும் விலகிப் பலப்பல தீவினைகளையும் அஞ்சாது செய்தொழிந்தீர். கருமை விளங்கும் மிடற்றினையுடைய எம்மிறைவனாகிய சிவபெருமான் ஓதிய வேத நெறிப்படி ஒருசிறிதும் ஒழுகியறியீர், அந்தோ! வருந்துதற்கே இந்நரகத்தை எய்தியுள்ளீர்! பற்பல காலமெல்லாம் இத்தீநரகினுக்கு நீயிர் இரையாகிவிட்டீர்! (வி - ம்.) போகம் - நுகர்ச்சி. பொருள் - செல்வம். தப - கெடும்படி. பல - பலவாகிய தீவினை. ஏதும் - சிறிதும். (272) | | கோட்டிப மிவுளி பொற்றேர் கொழுநிதி மனைவி மைந்தர் | | | ஈட்டிய பொருள்க ளெங்கே யெங்ஙன மிகந்து போந்தீர் | | | ஓட்டைநெஞ் சுடையீ ரொன்று முடன்வரக் காணீர் வாளா | | | நாட்டுளார்க் கவற்றை யீட்டி நரகெலா மீட்டிக் கொண்டீர். |
|