| (இ - ள்.) நுமது கொம்புடைய யானை எங்கே! குதிரை எங்கே! பொன்னாற் செய்த தேர் எங்கே! கொழுவிய நுமது பொன் முதலிய பொருட்குவை எங்கே! நும் மனைவி மக்கள் எங்கே! நீயிர் தேடிய பிறர் பொருள்கள் எங்கே! அவற்றையெல்லாம் யாண்டுப் போகட்டு வந்துள்ளீர்! ஓட்டை நெஞ்சுடையீரே! அவற்றுள் ஒன்றேனும் நும் பின்னர் வரக் கண்டிலீரே! வீணே அவற்றை எல்லாம் தீவினை பலசெய்து நாட்டிலுள்ள ஏதிலர்க்கே ஈட்டி அதன் பயனாக இந்த நரகமனைத்தையும் தேடிக் கொண்டுவிட்டீர். (வி - ம்.) கோடு - கொம்பு. இபம் - யானை. கொழுநிதி என்றது பொன் முதலியவற்றை. மனம் சென்ற வழியெல்லாம் போகவிடுதலின் ஓட்டை நெஞ்சு என்றார். (273) | | என்றுரு மேற்றிற் பொங்கி யிதழ்மடித் தெயிற்றிற் றின்று | | | வன்றிறற் சண்ட னாதி வயப்படைத் தலைவர்ப் பாரா | | | நின்றவிக் கொடியோர்க் கெல்லா நிகழ்த்துக தண்ட மென்ன | | | நன்றெனப் பணிந்து போந்து நவையறிந் தொறுத்தல் செய்வார். |
(இ - ள்.) என்று பேரிடி இடித்தாற் போன்று வெகுண்டு பேசி உதட்டை மடித்துப் பல்லான் மென்று வலிய சண்டன் முதலிய வலியுடைய தன் படைத்தலைவரை நோக்கி ஈண்டு நின்ற இத்தீவினையாளரை எல்லாம் அவரவர் வினைக்குத் தக ஒறுக்கக் கடவீர் என்று கட்டளையிட அப்படைத்தலைவரும் நன்றுநன்று அங்ஙனமே செய்வேம் என்று அக்கூற்றுவனை வணங்கி விடைபெற்றுப் போய் அத்தீவினையாளர் தம் தீவினைகளின் மென்மை வன்மையுணர்ந்து அவற்றிற்கேற்ப ஒறுத்தல் செய்வர். (274) | | வெவ்வினைப் பிலநா லேழுவிளம்புமிவ் விருபத் தெட்டும் | | | ஒவ்வொரு கோடி யாக வுறுமுறு நாலே ழுள்ளும் | | | தெவ்வினை முதன்மை யெய்தி யைவ்வைந்து செறிந்து நிற்கும் | | | இவ்வெலாம் பலகா லண்மி யினைபவா லொழிவு காறும். |
(இ - ள்.) தீவினைப்பயன் நுகர்தற்கிடமான நரகக்குழிகள் தொகையினால் இருபத்தெட்டாம். அவ்விருபத்தெட்டும் தனித்தனி ஒவ்வொரு கோடி வகையினவாம். இவ்விருபத்தெட்டு நரகத்துள்ளும் உயிர்கள் ஈட்டிக்கொள்ளும் தீவினைகளில் தலைமையுடைய தீவினைகளை நுகர்தற்குரிய தலைமைத்தன்மையுடைய நரகங்கள் தனித்தனியாக ஒவ்வொன்றினும் ஐயைந்து நெருங்கி இருக்கும். இந்நரகங்களிலெல்லாம் பலகாலும் அணுகித் தீவினையாளர் அவ்வினை முடியுங்காறும் துன்புறா நிற்பர். (வி - ம்.) நரகங்கள் இருபத்தெட்டாவன :- கோரம், கவின்கோரம், அதிகோரம், கோரதரம், கோரரூபம், தரளதரம், பயாநகம், காளராத்திரி, பயோற்கடம், சண்டம், மகாசண்டம், சண்டகோலாலம், சண்டதரம், சரோருகம், சலசவதி, வீமம், வீடணம், கரளம், விகரளம், குலிசம், முக்கோணம், ஐந்துகோணம், தீர்க்கதரம், பரிவர்த்துளம், ஏழா நரகம், எட்டாநரகம், தீர்க்கவொளி, மாயாநரகம் என்பன. (275) |