பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்525

 பிறையெ யிற்றினர் பிடித்தடி திரித்து வயிர
 அறையி னெற்றமுடி மூளைக டெறிப்ப வயர்வார்
 கறைம டுத்துமுச லம்பலர் கரங்க ளினெழீஇ
 முறைசெ யக்கடிதி னென்புகண் முரிந்து குழைவார்.

(இ - ள்.) பிறைபோன்று வளைந்த பற்களையுடைய காலன் மறவருட் சிலர் தீவினையாளருடைய கால்களைப் பிடித்துச் சுழற்றி வயிரப் பாறைகண் மேலே புடைத்தலானே தலையும் மூளையும் சிதர அயரா நிற்பர். வேறுசிலர் சினமுடையராய் முசலப்படையைக் கைகளாற் பற்றித் தூக்கி மோதுகையினாலே விரைவின் எலும்புகள் முறிந்து அழாநிற்பர்.

(வி - ம்.) அடிபிடித்து எனமாறுக. கறை - கறுப்பு, ஈண்டுச் சினம். முசலம் - இருப்புலக்கை.

(276)

 உண்ண லாகுமிது சொன்றியுறு நீரி துவெனா
 நண்ண லோடுமவை மென்கிருமி நாறு திரமாய்
 எண்ண மாறவிவை யேநுகர்தி ரென்று முடுகித்
 துண்ணெனக் கொடிய தூதுவர் தெழிப்ப வழிவார்.

(இ - ள்.) தீவினையாளர் தமக்களிக்கும் உணவினைப் பெற்றுழி அவை உண்ணத்தகுந்த சோறும் பொருந்திய நீரும் எனக் காணப்பட்டு உண்ணத் தொடங்கிய மாத்திரையின், மெல்லிய கிருமிகளும் தீநாற்றமுடைய குருதியுமாக மாறாநிற்பக் கொடிய அக்கால தூதர் இவற்றையே உண்ணுமின் என்று கடிந்து முடுகி அவர் நெஞ்சம் நடுங்கும்படி உரப்புதலானே பெரிதும் துன்புறாநிற்பர்.

          (வி - ம்.) சொன்றி - சோறு. தெழிப்ப - உரப்ப.

(277)

 சிவிறி வாங்கினர் முறுக்கிவிடு செப்பின் விதலைத்
 துவலை காலதரெ னத்துளைது றுப்ப மடிவார்
 இவறு மாதரினி ணர்க்கனல் கொழுந்து ருவினைத்
 தவவ ணைந்துடல நைந்துகவி னைந்து தளர்வார்.

(இ - ள்.) வேறுசிலர் காலதூதர் துருத்தியைக் கொண்டு விசைத்து வீசாநின்ற செப்புருக்கின் நடுக்கந்தரும் துளிகள் பலகணி போன்று உடலைத் துளைத்திடுதலானே துன்புறுவர். வேறுசிலர் அவாவுறுதற்குக் காரணமான மகளிர் உருவம்போன்று சமைத்த பல சுடரையுடைய பெருநெருப்பின் கொழுந்துருவினை நன்கு தழுவி உடல்நைந்து வீழ வருந்தித் தளராநிற்பர்.

          (வி - ம்.) விதலை - நடுக்கம். துவலை - துளி. காலதர் - பலகணி. தவ - மிக.

(278)

 வாழி வாளரம்வ லிந்திருபு றத்து நடவிப்
 போழும் வாருடல்பொ ருத்திநுதி வாய்ச்சு ரிகையால்