| | கோழி ளந்தசைகள் கொய்துபகு வாயி னுதவிக் | | | கேழி ரத்தமும டுப்பமதி கெட்டு விளிவார். |
(இ - ள்.) காலதூதர் அத்தீவினையாளர்மேல் ஈர்வாளை இழுத்து இருபுறமும் செலுத்திப் பிளக்கும் நெடிய உடலை மீண்டும் பொருந்தச் செய்து கூர்த்தவாயையுடைய உடைவாளானே கொழுவிய தசைகளை அரிந்து அரிந்து பிளந்த வாயிலூட்டி. மேலும் நிறமிக்க குருதியையும் ஊட்டுதலானே சிற்சிலர் சிந்தை கெட்டு வருந்தாநிற்பார். (வி - ம்.) வாழி - அசைச்சொல். வாளரம் - ஈர்வாள். நடவி - செலுத்தி. சுரிகை - உடைவாள். கேழ் - நிறம். (279) | | அண்ண மூடெழ முடக்கினை யழுத்தி யதுசேர் | | | திண்ணெ றுழ்த்தொடரி னாற்றினர்தெ றக்க வலுவார் | | | வண்ண வார்தழல்வ ளர்த்துமுடி கீழு றமறித் | | | தெண்ணி லாதகொடு மைத்தொழிலி யற்ற வழுவார். |
(இ - ள்.) வேறுசிலர் தம் மேல் வாயினுள்ளே செலுத்தி மேலெழும்படி முடக்கினை அழுத்தி அம்முடக்கைச் சேர்ந்த திண்ணிய வலிய சங்கிலியிலே தூங்கவிட்டு வருத்துதலானே கதறி வருந்துவார். நிறமுடைய நெடிய தீயை வளர்த்துத் தலைகீழாம்படி திருப்பி எண்ணிறந்த கொடிய செயல்களைக் காலதூதர் செய்தலானே பலர் அழா நிற்பர். (வி - ம்.) அண்ணம் - மேல்வாய். முடக்கி - கொக்கி. தொடர் - சங்கிலி. (280) | | உள்ள டித்துணை பெயர்ச்சியற வூசி நிமிர | | | முள்ளு டைக்கதையின் முன்னுகென மொத்த விழுவார் | | | வள்ள யிற்கணநி ரைத்தநில மீது மறுகத் | | | தள்ளி யோச்சியுடல் பொள்ளல்செய நோத றகுவார். |
(இ - ள்.) தீவினையோர் நடக்கும் பொழுது உள்ளங்காலிரண்டினும் பெயர்த்தலியலாதபடி ஊசி பாயாநிற்பவும் காலதூதர் செல்க என்று முட்டடியாலே மோதுதலானே சிலர் வீழாநிற்பர். வேறுசிலரைக் கூர்வேலினைத் திரளாக நட்ட தீக்குழியின்மேல் வீழும்படி தள்ளிச் செலுத்தலானே அவர் உடல் துளைபடுதலால் நோகுந் தகுதியை யுடையராவர். (வி - ம்.) கதை - தடி. முன்னுக - செல்லுக. வள் - கூர்மை. ஓச்சி - ஓச்ச. பொள்ளல் - துளை. (281) | | கூறு செய்துடல்கு டங்கரின டைத்தி ழுதுபெய் | | | தேறு வன்னியினி டத்தசைக ரைந்தி றுகுவார் | | | ஊறு செம்புனலொ ழுக்கெழ வரிந்து கழுகு | | | பாறு நாய்நரிமு கத்திடவி டும்பை படுவார். |
|