பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்527

(இ - ள்.) வேறுசிலர் உடலைக் கூறு கூறாக அரிந்து குடங்களில் அடைத்து நெய் பெய்து தீயின்கண் இடுதலாலே தசைகள் கரைந்து பின் இறுகவும் வருந்தாநிற்பர். வேறுசிலர் ஊற்றெடாநின்ற குருதி ஒழுகும்படி உடலை அரிந்து கழுகு பருந்து நாய் நரி முதலியவற்றின் முன்பு இடுதலானே வருந்தாநிற்பர்.

(வி - ம்.) குடங்கர் - குடம். இழுது - நெய். வன்னி - நெருப்பு. பாறு - பருந்து.

(282)

 உறுப்பி றுப்பவொரு பாலுருகு செம்பொ னொருபால்
 வெறுப்ப வொன்பதுது ளைக்கணும்வி டுப்ப வொருபால்
 கறுப்பொ டும்வயிறு கீழ்ந்துகுடர் காற்றி நுதிமுள்
 நிறைப்ப வோவெனநெ டுந்துய ருழத்த லுறுவார்.

(இ - ள்.) ஒருசார் உடலுறுப்பினை அறுப்பவும் மற்றொருசார் உருகிய செம்பொற் குழம்பினை வெறுக்கும்படி ஒன்பது துளைகளிலும் விடவும், மற்றொருசார் சினத்தோடும் வயிற்றைக் கிழித்துக் குடரைத் தொங்கவிட்டுக் கூரிய முட்களைச் செறிக்கம் ஓவென்று கதறி நெடிய துயரத்தினை எய்தாநிற்பர்.

(வி - ம்.) கறுப்பு - சினம். காற்றுதல் - தூங்கவிடுதல்.

(283)

 வண்டு வாருடறு ளைப்பமத வேழ முலவை
 கொண்ட லைத்தெறிய வேங்கைகுரல் கவ்வி நலிய
 மிண்டி நாயடவி ழுங்கவர வங்கொ டிவளாய்க்
 கண்டொ டக்கிருமி கெண்டிநெளி யக்க தறுவார்.

(இ - ள்.) வண்டுகள் நெடிய உடலைத் துளைத்தலானும், மதயானை கொம்பாற் குத்தி எறிதலாலும், புலி குரல்வளையைக் கவ்வி வருத்தலானும், நாய்கள் நெருங்கிக் கடித்தலானும், பாம்புகள்பற்றி விழுங்குதலானும், காக்கைகள் சூழ்ந்துகொண்டு கண்களை அகழ்தலானும், புழுக்கள் உடலைக் கிண்டி நெளிதலானும் துன்புற்றுக் கதறியழுவார்.

(வி - ம்.) உலவை - கொம்பு. குரல் - குரல்வளை. மிண்டுதல் - நெருங்குதல். கொடி - காக்கை. வளாய் - சூழ்ந்து. கெண்டி - கிண்டி.

(284)

 கலைவ லார்மகளிர் பூண்முலை கலப்பொ ழிவுகா
 றுலைவி லாதுவள ரின்பமல தொன்றும் விரவா
 தலைசெ யள்ளலகல் காறுமடர் துன்ப மலது
 நிலைவ தின்றெனின தன்றிறநி கழ்த்த வெளிதே.

(இ - ள்.) காப்பியக் கலைவல்லோர், மகளிருடைய அணிகலனுடைய முலைப்போகம் முடியுந் துணையும் மேன்மேலும் வளராநின்ற இன்பமன்றித் துன்பம் கலவாது என்பவேனும், அதனால் விளையும் தீவினையால் வருத்துகின்ற நரகக்குழியை விட்டு அகலுந்துணையும்