| செத்தாருமின்றி வாழ்ந்தாருமின்றி அவமே வாழ்நாளைப் போக்கா நிற்பர். தமக்கு உய்தியை உணர்கின்றிலர். என்னே இவர்தம் அறிவிருந்தவாறு. (வி - ம்.) இறைவனைப் பித்தன் என்றற்கு ஒருவிளக்கம் கூறுவார் அருளின் பித்தேறிநின்ற முனைவன் என்றார். அணவியும் - எய்தியிருப்பவும். இருந்து தீவினையீட்டலின் செத்தாருமல்லர் என்றும் இருந்தும் பயனின்மையால் வாழ்ந்தாரும் அலர் என்றார். (293) | | வருணங்க டோறு நிலைதோறு மாற்றல் வகைமைக்கி யன்ற வினைகள் | | | தருகின்ற வேத முதனூலு நாளுந் தவிர்கின்ற பாரு மியைய | | | மருவொன்று போது புனலெங்கு மன்ன வளர்பூசை கொள்ள விறைவன் | | | உருவொன்றி நிற்ப நிரயத்து மீள வுறுவாரி தென்கொ லறிவே. |
(இ - ள்.) அந்தணர் முதலிய சாதிகட் கேற்பவும் பிரமசரிய முதலிய நிலைகளுக்கேற்பவும் அறிவு முதலிய வலிமைகட்குத் தகவும் பொருந்திய நல்வினைகளை வகுத்துணர்த்துகின்ற வேத முதலிய மெய் நூல்களும் அவற்றை மேற்கோடற்குரிய ஆயுள்நாளும், தீவினை அகல்தற்குக் காரணமான புண்ணிய பூமியும் முற்செய்த தவமுண்மையால் தமக்குக் கிடைத்திருப்பவும், இறைவனை வழிபடற்குரிய மணமலரும் நன்னீரும் யாண்டும் எண்மையிற் கிடப்பனவாக நிலைபெற்றிருப்பவும், அன்பு வளர்தற்குக் காரணமான வழிபாட்டினை ஏற்றுக் கோடற்கு இறைவன் திருக்கோயில் தொறுந் திருவுருவங்களிலே கலந்து எழுந் தருளியிருப்பவும், அந்தோ இறைவனை வழிபட்டு வீடுபெறற்கறியாராய் மீண்டும் நரகத்திற்கே செல்வர். இவர் அறிவிருந்தவாறென்னே! (வி - ம்.) வருணம் - அந்தணர் முதலிய சாதி. நிலை - பிரமசரிய முதலியன. ஆற்றல் வகைமை - அறிவு வளர்ச்சியின் படிமுறை. வருணத்திற் கேற்பன, வேள்வி முதலியன. நிலைக்கேற்பன வழிபாடு முதலியன. ஆற்றல்வகைக் கேற்பன, சரியை முதலியன. (294) | | மறைநீதி கொண்டு புரிவோர்கள் விண்ணின் மகிழ்போக முண்டு விமலம் | | | நிறைஞான வாரி படிவுற்ற பாவ நிலைமன்னி நிற்பர் மறைநூல் | | | முறைகோடி னார்க ணிரயத்து மீள முழுகித்தி ளைப்ப ரடியார் | | | அறைபாத கங்கள் செயினும்வி ழார்க ளிமையார்வ ணங்க வமர்வார். |
(இ - ள்.) நூல்நெறியை மேற்கொண்டு ஒழுகுவோர் துறக்கம் புகுந்து ஆண்டு மகிழ்தற்குக் காரணமான இன்பங்களை நுகர்ந்து மேலும் தூய்மை நிறைந்த பேரறிவுக் கடலிலே அழுந்தி யான் என தென்னும் செருக்கொன்று மில்லாததொரு நிலையிலே நிலைபெற்றிருப்பர். நூன்முறை பிறழ்ந்து ஒழுகினோர் மீண்டும் முற்கூறப்பட்ட எரிவாய் நிரயமே புக்கழுந்தி வருந்துவர். இறைவன் அடியார் முற்கூறப்பட்ட தீவினைகளை, ஒரோவழி செய்யநேரினும் நிரயம் புகுதலிலர். துறக்கம் புகுந்து ஆண்டுத் தேவரும் தம்மை வணங்க வீற்றிருப்பர். (வி - ம்.) விமலம் - தூய்மை. அபாவநிலை - யான் எனதற்றநிலை. "ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன் அவர்தாஞ் |