பக்கம் எண் :

532தணிகைப் புராணம்

செய்வினை தன்னால் நலமுடனே பிறர் செய்வினை யூட்டி யொழிப்பான்" என்பதுபற்றி அடியார் நரகில் விழார் என்றார்.

(295)

 அள்ளற் பரப்பி னினைவோரும் விண்ணி னடர்போக வின்ப வுததி
 வெள்ளத் தழுந்து மிமையாரு மண்ணின் மிளிர்மானி டாதி யுருவம்
 கொள்ளப் படுக்கு முயிரும்பி றத்தல் குழைவுற் றிறத்தல் பலவும்
 தெள்ளித்தெ ளிந்த கலைமாத வத்த தெரியக் கிளத்து மறிதி.

(இ - ள்.) நரகநிலத்தே வருந்துவோரும் துறக்கத்தே செறிந்த நுகர்ச்சியின்பக் கடலாகிய வெள்ளத்திலே அழுந்தி இன்புறும் அமரரும் இம்மண்ணுலகத்தே விளங்குகின்ற மக்கட்பிறப்பு முதலிய பிறவிகளை மேற்கொள்ளும்படி புகுத்தப்படும் உயிரும் ஆகிய உயிரினங்கள் கருவினுட் புகுந்து பிறத்தலும் பின் வருந்தி இறத்தலுமாகிய இன்னோரன்ன பலவற்றையும் நன்கு தெளிந்த கலைகளையுடைய அகத்தியனே! விளங்கக் கூறுவாம். அவற்றையும் கேட்டுணர்ந்து கொள்வாயாக.

(வி - ம்.) உததி - கடல். இமையார் - அமரர். பிறப்பித்தல் இறைவன் செயலாதல் தோன்ற உருவம் கொள்ளப் படுக்கும் என்றார்.

(296)

வேறு

 பாவகா ரணத்தாற் பூதத்தி னிமைக்கும் பாணியி னரகருற் பவிப்பார்
 மேவுபுண் ணியத்தாற் பூதசா ரத்தின் விண்ணவ ரொருகணத் துதிப்பார்
 ஓவுறும் பூதத் திண்பரி ணாமத் தோதிரு வினையின்மண் ணுயிர்கள்
 ஆவன பையுண் மானிடம் விலங்கா மண்டத்தா மரவம்புள் ளாதி.

(இ - ள்.) தீவினை காரணமாகப் பூதங்களின்று தீவினையாளர் ஒரு நொடிப்பொழுதில் நரகநிலத்திலே யாக்கை பெற்றுத் தோன்றாநிற்பர். பொருந்திய நல்வினை காரணமாக நல்லோர் ஒருநொடிப் பொழுதிலே துறக்கத்தில் பூதசாரத்தாலாய யாக்கையுடையராய்த் தோன்றாநிற்பர். அழியுமியல்புடைய பூதபரிணாமமாகிய பருவுடல்களிலே நல்வினை தீவினை யிரண்டும் காரணமாக இவ்வுலகத்தே மானிடம் முதலிய உயிர்கள் தோன்றாநிற்கும். மானிடரும் விலங்குகளும் கருப்பையுட் டோன்றும், பாம்பு பறவை முதலியன முட்டையுள் தோற்றுவனவாம்.

(வி - ம்.) பாணி - காலம். நரகர் பூதவுடலினும் அமரர் பூதசார உடலினும் மண்ணுயிர்கள் கருப்பை முதலியவற்றுள் பருவுடல் கொண்டு பிறக்கும் என்க.

(297)

 கிருமிகீ டாதி கசிவினிற் றோன்றுங்
           கேழிணர்த் தருமுதற் பலவும்
 உருவவித் திடத்து நிலம்புனல் வெயில்கா
           லுறவெழும் வித்துயிர்த் தவற்றுள்
 அரியன யவைமுன் செந்நெலீ றாக
           வறைவன வெண்ணிரண் டவைதாம்