பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்533

 உரியதம் பலத்தி னசிக்குமப் பலந்தா
           னுணவதாய் மனிதரை வளர்க்கும்.

(இ - ள்.) பேன் புழு முதலியன வியர்வையிற் றோன்றும் நிறமுடைய பூங்கொத்துக்களையுடைய மரம் முதலிய ஒன்றறிவுயிர்கள் பலவும் அழகிய விதையிலிருந்து நிலம் நீர் வெயில் காற்று முதலியன பொருந்தும்பொழுது தோன்றுவனவாம். வித்தினின்றும் தோன்றியவற்றுள் யவைமுதற் செந்நெல் ஈறாகக் கூறப்படுவனவாகிய பதினாறு வகைக் கூலங்களும் அருமையுடையனவாம். அக்கூலங்கள் தம்பாற் பொருந்திய பயன் காரணமாகவே உணவாக அடப்பட்டு அழியும். அவற்றின் பயனே உணவாக மானிடரை வளர்க்கும்.

(வி - ம்.) கிருமி கீடம் என்பன புழுவின் வகை. கசிவு - வியர்வை. யவை - ஒருகூலம். ஏனைய கூலம் சிறந்தன அல்ல என்பது கருத்து.

(298)

 அகத்திடு முணவு நீர்விராய்ப் பருவ
           மடைதலு முணவுமே லறல்கீழ்த்
 தகப்பகுத் திடுமாற் பிராணன்பின் வளிதீச்
           சாரங்கோ தெனவிரண் டாகப்
 பகுத்தலுஞ் சார மிதயநின் றெல்லா
           நாடியுஞ் சமானனாற் பயிலும்
 இகத்தருந் துரால்பன் னிரண்டென வெளியாஞ்
           சாரமு மெண்ணுமத் துணைத்தாம்.

(இ - ள்.) வயிற்றினுள்ளே செலுத்தப்பட்ட சோற்றோடு நீருங் கலத்தலானே அவை பக்குவம் எய்தும். எய்தியவுடன் பிராணன் என்னும் காற்று அவற்றைப் பொருந்தி நீர் கீழும் சோறு மேலுமாகப் பிரித்துவிடும். பின்னர் வயிற்றுத்தீயும் காற்றுங்கூடி அவற்றைச் சாரமும் கோதுமாகப் பகுக்கும். அவற்றுட் சாரம் இதயத்தினின்று எல்லா நாடிகளிலும் சமானன் என்னும் காற்றைத் துணைகொண்டு புகாநிற்கும். தள்ளப்பட்ட கோது பன்னிரண்டாகி வெளிப்படும். சாரமும் அப்பன்னிரண்டே யாம்.

(வி - ம்.) பருவம் - செவ்வி. அறல் - நீர். தீ - வயிற்றுத்தீ. இகத்தரும் - இகுத்த; தள்ளிய. அத்துணைத்து - அவ்வளவிற்று.

(299)

 இயக்கமோ ரிரண்டாய் மிடற்றினில் வழுக்காய்
           நாசியி னிளங்களிப் புனலாய்
 வயக்கமாண் விழியிற் பீளையாய்ச் செவிநா
           மணியெயி றுகிர்குதங் குய்யம்
 முயக்குறு மழுக்காய் மயிர்த்துளை தோறு
           முகிழ்க்கும்வே ராய்த்துரால் வழங்கும்