பக்கம் எண் :

534தணிகைப் புராணம்

 உயக்கிளர் சாரந் தனிற்றுவக் கதனி
           லுதிரமற் றதினிணத் துடனூன்.

(இ - ள்.) குதங் குய்யங்கள் வழியாய் இயங்கும் மலமாகவும், நீராகவும், மிடற்றினின்றும் கோழையாகவும் நாசியினின்றும் இளகிய சளி நீராகவும், ஒளிமாட்சிமையுடைய கண்ணின்றும் பீளையாகவும் செவி நா முத்துப்போன்ற பல் நகம் குதம் குய்யம் என்னுமிவற்றினின்றும் பொருந்திய அழுக்காகவும் மயிர்த்துளைதோறும் தோன்றா நின்ற வியர்வையாயும் அப்பன்னிருவகைத் துரால்களும் வெளிப்படும். இனி, உடல் உய்தற்பொருட்டுக் கிளர்ச்சியுறுகின்ற சாரத்தினின்று தோலும் அதனினின்று குருதியும் அதனின் நிணமும், ஊனும்.

(வி - ம்.) குதங் குய்யங்களில் இருவகை யியக்கமாகவும் மேலும் அழுக்குமாய் வெளிப்படும் என்றவாறு. வேர் - வியர்வை. உய - உய்ய. துவக்கு - தோல். ஊன் - தசை.

(300)

 தசையிடை நரம்பு முரோமமு நரம்பி
           னாடிநா டியிற்றயங் கத்தி
 அசைவறு மென்பின் மூளையு நகமு
           மூளையிற் சுக்கில மதனில்
 பசையுறு கருவா மிம்முறை சாரம்
           பன்னிரண் டுறுப்பதாய்ப் பயிலும்
 விசைகொள்சுக் கிலஞ்செம் புனலின்மிக் குதரம்
           விரவுறி னாண்மக வாகும்.

(இ - ள்.) தசையினின்று நரம்பும், மயிரும், நரம்பினின்று நாடியும் நாடியினின்று எலும்பும், அசைதலில்லாத அவ் வெலும்பினின்றும் மூளையும் நகமும், மூளையினின்றும் சுக்கிலமும் (அல்லது சுரோணிதமும்) சுக்கில சுரோணிதங்களினின்றும் கருவும் தோன்றும். இங்ஙனம் சாரமும் பன்னிரண்டு உறுப்பாய் வளரும். வேகமுடைய சுக்கிலம் சுரோணிதத்தினும் மிகுந்து தாய்வயிற்றிற் கலக்குமிடத்தே அக்கரு ஆண்மகவாகத் தோன்றும்.

(வி - ம்.) நாடி என்றது நுண்ணரம்புகளை. அத்தி - எலும்பு. பசை - நெய்ப்பு, அவாவுமாம். புணர்ச்சியின்போது விரைந்து பாயும் சுக்கிலம் என்றவாறு. தலைமைபற்றிச் சுக்கில மென்றாரேனும் சுரோணிதமும் கொள்க. செம்புனல் - சுரோணிதம்.

(301)

 செம்புனல் வெண்ணீர் தனின்மிகிற் பெண்ணாஞ்
           செம்புனல் வெண்புன னிகர்ப்பின்
 அம்புவி யிழிக்கு மலியுரு வாகு
           மளிப்பவர் குணமகக் கெய்தும்
 வம்பிலட் டகத்தோ டுயிர்பிதா நுகரும்
           வண்சுவை பற்றியுண் ணுழைந்து