பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்535

 வெம்புவெண் புனற்பட் டன்னைதன் கருவிற்
           சட்டக மாய்ப்புவி வீழும்.

(இ - ள்.) சுரோணிதம் சுக்கிலத்தினும் காட்டில் அளவின் மிகுமாயின் பெண்மகவாய்த் தோன்றும் அவ்விரண்டும் சம அளவாமிடத்தே உலகினர் இழித்துக் கூறுதற்குக் காரணமான அலியாகத் தோன்றும். தாய் தந்தையர் குணம் மகவிற்கும் உண்டாகும். உயிர் தனது பழைதாகிய புரியட்டகவுடலோடு தந்தையாவான் உண்ணும் வளப்பமுடைய சுவையைப் பற்றுக் கோடாகக்கொண்டு அவனுடலிற் புகுந்து ஆங்குச் சுக்கிலத்தைக் கலந்து தாயாவாள் கருப்பையின்கண் உருப்பெற்று முதிர்ந்துபின் இவ்வுலகிலே வீழாநிற்கும்.

(வி - ம்.) அம்புவி - ஆகுபெயர். மகக்கு - மகவிற்கு. "தந்தை யறிவே மகனறி" வென்றார், நாலடியினும், சட்டகம் - உடம்பு.

(302)

 உயிர்படு கருவோர் வைகலிற் குன்றி
           யுறுமைந்திற் புற்புத மொக்கும்
 பயிலின வூனா மேழிலீ ரேழிற்
           பரந்துசெம் புனறிர ளூனாம்
 வயமுறு பீச மையைந்திற் சிறிது
           வருஞ்சிரங் களஞ்சிறு புறமே
 வியன்முது தென்பென் றுரைத்திடு நான்கும்
           விளங்குறு முப்பது நாளில்.

(இ - ள்.) உயிர் கலந்த கரு ஒருநாளிலே குன்றியளவாத்திரளும். ஐந்து நாளிலே நீர்க்குமிழியனைத்தாம். ஏழுநாளில் இளவூனாகும், பதினான்குநாளில் பரவிக் குருதித்திரள் ஊனாகும். இருபத்தைந்து நாளில் வலியுடைய பீசஞ் சிறிது தோன்றும் முப்பது நாளகவையின் தலை கழுத்து முதுகு அகன்ற முதுகெலும்பு என்பன விளக்கமாகத் தோன்றும்.

(வி - ம்.) வைகல் - நாள். புற்புதம் - நீர்க்குமிழி. வயம் - வலிமை. பீசம் - அண்டம், பிடுக்கு (விதை). களம் - கழுத்து.

(303)

 தாளடி நிதம்பந் தடங்கர மருங்கு
           சார்நரு மிருமதி வரையில்
 கோளுறு வடிவிற் சந்திகண் மூன்றிற்
           கொழுவிர னான்கிலைம் மதியில்
 வாளுகிர் நாசி முகங்குய்யங் கன்னம்
           வாலெயிற் றூனொழுங் காறின்
 நீளுறு கன்னத் துளையெழு மதியி
           னிகழ்குறி விளங்குறத் தோன்றும்.