| (இ - ள்.) இரண்டுதிங்கள் அகவையின் கால் அடிகள் கடிதடம் (அரை) பெரியகை இடை என்னும் இவ்வுறுப்புக்கள் உருவாகும். கொண்ட அவ்வடிவிலே மூன்றாந்திங்களில் மூட்டுக்கள் உண்டாகும். நான்காந்திங்களிலே கொழுவிய விரல்களும் ஐந்தாந்திங்களிலே, கூர்த்த நகமும் முகமும் மூக்கும் குய்யமும் செவியும் பற்களின் அடித்தசை யொழுங்கும் உண்டாகும். ஆறாந்திங்களிலே நெடிய செவித்துளைகளும் ஏழாந்திங்களிலே (ஆண் அல்லது பெண்) குறி விளக்கமாக வுண்டாகும். (வி - ம்.) கோளுறு - கொண்ட. குறி - ஆண் பெண் அறிகுறியுறுப்புகள். (304) | | திங்களோ ரெட்டிற் குதமுந்தி யேனைச் | | | செறிதரு மங்கமா திகளும் | | | தங்குறும் பிராணன் முதல்வளி யைந்துந் | | | ததையுமுந் தியின்வழி யன்னை | | | நுங்குண விரதம் வயிற்றுறு மின்ப | | | துன்பமு மனாதியா னுகரும் | | | அங்கண்முன் னிகழ்ச்சி கனவெனத் தோன்ற | | | வளாவிய மோகம்விட் டகலும். |
(இ - ள்.) எட்டாந்திங்களில் குதமும் கொப்பூழும் பிற உறுப்புக்களும், உடலிலே தங்காநிற்கும் பிராணன் முதலிய காற்றுக்களும் பொருந்தும். தாய் உண்ணும் உணவின் சாறு கொப்பூழ் வழியாக அக்கருவின் வயிற்றில் வந்துசேரும். அக்கரு மன முதலிய கருவிகளானே இன்பதுன்ப நுகர்ச்சியும் உடையதாயிருக்கும். அப்பொழுது முற் பிறப்பின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அதற்குக் கனாப்போலத் தோன்றா நிற்கும். அவ்வழி உயிரை அளாவிய மோகஞ்சிறிது அகலாநிற்கும். (வி - ம்.) ஐந்து வளி என்றது, பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்பவற்றை. (305) | | இறப்பொடு பிறப்பிற் பன்முறை யிதுகா | | | றிடருழந் தனமினிப் பிறந்தாங் | | | கறப்பெருங் கடவுள் பூசனைப் பேற்றா | | | லவற்றினை யறுத்துமென் றெண்ணிச் | | | சிறப்புற விருக்கு முயிர்கருப் பையுஞ் | | | செறிவழுக் குதகமு மற்றும் | | | உறப்பெரி தழிந்து மோகக்கான் மிளிர்ப்ப | | | வுணர்விழந் தரிதின்மண் சாரும். |
(இ - ள்.) முன்பு இறப்பானும் பிறப்பானும் பலமுறை இது வரையில் துன்புற்றுழலாநின்றேம். இனி இப்பிறப்பிற் பிறந்து அங்கு அறவாழி அந்தணனாகிய முழுமுதற் கடவுளை வழிபட்டு அதன் |