பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்537

பயனாலே அவ்விறப்புப் பிறப்புக்களை ஒருதலையாக அறுத்தொழிக்கக் கடவேம் என்று எண்ணிச் சிறப்பாக இருக்கும் அவ்வுயிர், கருப்பையும் அதனுட் செறிந்த வழுநீரும் பிறவும் தன்னை வருத்தப் பெரிதும் வருந்தி மோகம் மீளவும் வந்து பொருந்தவும் வியானன் என்னும் காற்று உந்தித் தள்ள உணர்வு மயங்கி அரிதாக இவ்வுலகத்திலே பிறவாநிற்கும்.

(வி - ம்.) உயிர் அழிந்து கால் மிளிர்ப்ப மண்சாரும் என்க.

(306)

 சூக்கும வுடலைப் பற்றியே யெழுந்த
           தூலதே கத்தினுண் முன்னர்
 ஆக்கிய வறம்பா வங்களின் பயனை
           யவ்வினை யெனப்பின்பு பயக்கும்
 நீக்கரும் வினைகள் வளாவியா னென்னுஞ்
           செருக்கினா னித்தலு மருந்திப்
 போக்கொடு வரவிற் படுமுயி ரிறைவன்
           பொருவில்பா தம்புகு காறும்.

(இ - ள்.) இவ்வாறு நுண்ணுடலைப்பற்றிக் கொண்டு தோன்றிய பருவுடலிலே யிருந்து முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைப் பயன்களை அவ்வினைகளைப் போன்றே பின்னர் விளைக்கும் விலக்குதற்கரிய ஊழ்வினைகள் கலக்கப் பெற்று யான் எனது என்னும் செருக்குடைமையாலே நாடோறும் இன்பதுன்பமாக நுகர்ந்து இறப்புப் பிறப்புக்களிலே உயிர்கள் புக்குழலாநிற்கும் இறைவனுடைய ஒப்பற்ற திருவடி நிழலிலே புகுமளவும்.

          (வி - ம்.) சூக்கும வுடல் - புரியட்டகம். வினைகள் : ஆகூழ் போகூழ்கள். யான் என்றமையால் இனம்பற்றி எனது என்பதும் கொள்க. இவைகளே நுகர்ச்சிக்கு ஏதுவாகலின் செருக்கினால் என்றார். போக்குவரவு - இறப்புப் பிறப்புக்கள்.

(307)

 மூன்றரைக் கோடி நாடியவ் வளவே
           முற்றிய மயிரெயி றெண்ணான்
 கான்றகை யடியி னுகிரிரு பதுவீ
           ரியமழாக் குடற்பித்த முழக்கு
 மான்றுறு மிடற்றுக் கபமுரி யுடனா
           னாழிவண் ணிணத்தொடி யைந்நான்
 கேன்றமே தைக்குத் தொடிகளோ ரைஞ்ஞூ
           றீண்டுமூன் றொடியொரு நூறே.

(இ - ள்.) நாடியின் அளவு மூன்றரைக் கோடியாகும்; முதிர்ந்த மயிரின் அளவும் மூன்றரைக் கோடியாம்; பற்கள் முப்பத்திரண்டாம்; அமைந்த கைகால்களிடத்தேயுள்ள நகங்கள் இருபது. சுக்கிலம் (அல்லது சுரோணிதம்) ஓராழாக்கு. குடற்குரிய பித்தம் உழக்காம். மயங்குங்கால