| உண்டாகும் கபம் ஓருரியே நானாழி. வளவிய நிணம் இருபது பலம். உண்டாகிய இறைச்சியின் அளவு ஐந்நூறு பலமாம். செறிந்த ஊன் நூறுபலம் என்ப. (வி - ம்.) ஆன்ற - அமைந்த. உகிர் - நகம். அழாக்கு - விகாரம். மான்றுறு - மயங்கிப் பொருந்தும். தொடி - பலம். மேதை - இறைச்சி. (308) | | இளகுநெய்த் தோரு மிறுகுநெய்த் தோரு | | | மியம்புறிற் றொடியொரு மூன்றாம் | | | வளமலி மூளை பன்னிரு தொடியா | | | மயிர்முத லனைத்தையுந் தொகுத்திட் | | | டளவிடி லாக்கை யாயிரந் தொடியா | | | மருவருப் புறுமியக் கங்கட் | | | களவிலை யிந்தப் புலையுடற் பொறையைப் | | | பொருளென மதிப்பரோ வறிந்தோர். |
c(இ - ள்.) இளகிய குருதியும் இறுகிய குருதியும் இவ்வளவெனக்கூறின் தனித்தனி மூன்றுபலம் என்ப. வளமிகுதற்குக் காரணமான மூளை பன்னிரண்டு பலமாம். இனி, மயிர் முதலிய அனைத்தையும் கூட்டிக் கணக்கிட்டால் உடலின் அளவு ஆயிரம் பலமாகும். அருவருத்தற்குக் காரணமான மல முதலியவற்றிற்கு அளவில்லை. இத்தகைய புலாலாலியன்ற உடற்சுமையை மெய்யறிவாளர் ஒருபொருளாக மதிப்பரோ! (வி - ம்.) நெய்த்தோர் - குருதி. வளம் - அறிவுவளம், மதியார் என்றபடி. (309) | | தமனியக் கடமே யாயினும் பவ்வீத் | | | தங்குறின் விழைஞரும் பற்றார் | | | அமிழ்தமே யானுந் துய்ப்புறிற் பவ்வீ | | | யாக்குமிவ் வுடற்புக ரறிந்தும் | | | இமிழ்தரப் பற்று மடவருக் குரைத்து | | | மென்பயன் றீர்த்தமா டிடினும் | | | உமிழ்முடை யாக்கை சுசியுறா திறைவ | | | னுண்மைதேர்ந் துயிர்சுத்தி யுறுமே. |
(இ - ள்.) பொன்னாற் செய்த குடமாகவிருப்பினும் அதனகத்தே மலம் நிரப்பப்பட்டிருப்பின் பேராசையுடையோரும் அதனைத் தொடமாட்டார். தான் உண்பது அமிழ்தமேயாக விருப்பினும் மறுகணம் மலமாக்கிவிடும் இவ்வுடலின் இழிதகவினை உணர்ந்திருந்தேயும் அவாவுண்டாக அதனைப்பற்றிக் கொண்டுழலும் மடமையுடையோர்க்கு இவற்றை விளக்கிக் கூறியும் பயன் என்னை? இதுநிற்க. இனி நாடோறும் நன்னீரிற் குளிப்பினும் முடைநாற்றம் வீசும் |