பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்539

உடல்தூய்மையுறுதல் எஞ்ஞான்றும் இல்லை. அதன்கண் வாழும் உயிர்மட்டும் மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்துகொண்ட வளவிலே தூய்மை
யெய்தாநிற்கும்.

(வி - ம்.) தமனியக்கடம் - பொற்குடம். பவ்வீ - இடக்கரடக்கு. புகர் - குற்றம். இமிழ் - இனிமை. சுசி - தூய்மை. சுத்தி - தூய்மை.

(310)

 முப்பொரு ளியல்பு முள்ளவா றுணர்ந்து
           முழுத்தபே ரறிவினுள் விழித்தோர்
 இப்புவி யவர்போல் வினைபல குயிற்றி
           யிருப்பினும் வினைப்பய னெய்தார்
 கைப்பட மனையைப் புதல்வியைத் தழூஉங்காற்
           கருத்துவேற் றுமையுங்கை வருடச்
 செப்பிள முலையார் மகன்பதிக் களிக்கும்
           பயத்தின்வேற் றுமையுநேர் தெரிதி.

(இ - ள்.) இறை உயிர் பற்று என்னும் மூன்று பொருள்களின் இயல்புகளையும் ஆராய்ந்து ஐயந்திரிபற உள்ளவாறே உணர்ந்து முழுமையுடைய பேரறிவினிடத்தே விழிப்படைந்த மெய்ஞ்ஞானியர், இந்த வுலகத்தினர் போன்றே பற்பல செயல்களையுஞ் செய்துகொண்டிருந்தாராயினும் அவ்வினைகளின் பயனை எய்தமாட்டார். அஃதெங்ஙனமெனின், ஒருவன் தன் மனைவியைத் தன் கையினாற் றழுவுமிடத்தேயும், தன் மகளைத் தழுவு மிடத்தேயும் செயல் ஒன்றாயிருந்தும் கருத்தின் கண் வேற்றுமை யிருத்தலும், செப்புப்போன்ற முலையினையுடைய மடந்தையர் தம்முலையைக் கொழுநன் வருடுங்காலும் தன் குழவி வருடுங்காலும் செயல் ஒன்றேயாயிருந்தும் அவள் அவ்விருவருக்கும் அவ்வப்போது நல்கும் பயன்மட்டும் வேற்றுமையுடையன வாதல் கண்டாமன்றே; இவ்வுவமைகளைக் கொண்டு தெளிந்துகொள்வாயாக.

(வி - ம்.) முழுத்த பேரறிவில் விழித்தலாவது - தனக்கென ஒன்று மின்றித் தன் செயலெல்லாம் இறைசெயலாக உணர்ந்து கொண்டிருத்தல். தஞ்செயல் இறைசெயலாகவே கொண்டு செய்தலின், வினைப்பயன் அவர்க்கில்லையாயின என்க.

(311)

 இருவகை யியக்கங் கழிப்புழி யுண்டா
           மின்பமெவ் வளவையத் துணைத்தே
 கருவிழிச் செவ்வாய் மகளிரைக் கலந்து
           கழிப்புறு மின்பமு மதற்கே
 அருவருப் பெவரு மெய்துறும் பவ்வீக்
           கடர்ந்தெழும் வன்றிநாய் போலத்
 தெருள்கிலா ரெல்லா மிவர்ந்திரு பயனுஞ்
           சிதைத்தரும் பழிச்சுமை தரிப்பார்.