| (இ - ள்.) மலங்கழிக்குங்காலும் நீர்விடுங்காலும் ஓரளவு இன்பமுண்டாதல் கண்டாம் அன்றே! அவ்வளவிற்றே கரிய விழியையும் சிவந்த வாயையுமுடைய மகளிரைப் புணர்ந்து வெண்ணீரை விடுங்காலத்துண்டாகும் இன்பமுமாம். இவ்வெளிய இன்பத்தின் பொருட்டே, யாரும் அருவருப்புறுதற் கிடமான மலத்தைத் தின்றற்கு ஒன்றனோடொன்று கலாய்த்துக்கொண்டு ஓடாநின்ற பன்றியும் நாயும் போல மெய் உணராத மடவோரெல்லாம் ஓடி இருவகைப் பயனையும் சிதைத்துப் பழியாகிய சுமையையே சுமவாநிற்பர். (வி - ம்.) சுக்கிலங் கழிப்புறுமின்பம் என்க. பவ்வீ - இடக்கரடக்கு. அடர்த்து - கலாய்த்துக்கொண்டு. வன்றி - பன்றி. (312) வேறு | | உருத்திரன் மன்ற னாளி னுமையிடுஞ் சாபந் தாங்கி | | | மருத்ததா மரைப்பூ வாழ்க்கை வானவ னிடும்பை கூர்ந்தான் | | | திருத்தபு மார்பன் வேற்றுத் தேமொழி மனையை வெஃகிக் | | | கருத்தழி மம்மர் கூர்ந்து கலங்கஞர் பெரிதுந் துய்த்தான். |
(இ - ள்.) உருத்திரன் உமையை மணஞ் செய்தநாளிலே மணங்கமழும் தாமரை மலரிலிருப்போனாகிய பிரமதேவன் அவ்வுமையைக் காமுற்றமையானே அவ் வுமையன்னையார் இட்ட சாபத்தை ஏற்று மிகவும் வருந்தினான். திருமகள் தங்கிய மார்பையுடைய திருமாலும் பிறனுடைய இனிய மொழியினையுடைய மனைவியை விரும்பிக் கருத்தழிதற்குக் காரணமான மயக்கமிகுந்து கலங்குந் துன்பத்தைப் பெரிதும் நுகர்ந்தான். (வி - ம்.) மருத்த - மணங்கமழ்ந்த. திருத்தபு - திருத்தங்கிய என்க. (313) | | இந்திரன் பிறினில் காமுற் றிழிகுறி முழுதும் பெற்றான் | | | சந்திரன் குரவ னில்லாட் டழுவிவெந் துயரத் தாழ்ந்தான் | | | அந்தரத் தவரு மண்மே லவருமிவ் வாறு பட்ட | | | வெந்துயர்க் களவின் றாக்கை நோய்க்கும்வே றவதி யின்றே. |
(இ - ள்.) அமரர்கோமானாகிய இந்திரன் பிறன்மனையாளாகிய அகலிகையை விரும்பி இழிந்த பெண்குறிகளை உடன்முழுதும் உடைய னாயினன். மற்றுச் சந்திரனும் ஆசிரியன் மனைவியைத் தழுவியதனாலே வெவ்விய துன்பத்திலே அழுந்தினான். இவ்வாறு அமரர்களும் மண்ணுலகத்தோரும் காமத்தாலே எய்திய வெவ்விய துயரங்கட்கு எல்லை யின்று. இனி இத்துயரமேயன்றி இவற்றின் வேறாய் உடலைப்பற்றி வருத்தும் பிணிகளுக்கும் எல்லையில்லையே. (வி - ம்.) பிறன் என்றது கௌதமனை. குரவன் - ஆசிரியன். அவதி - எல்லை. (314) | | வலாரிதோள் வாத நோயன் வண்மதி கயநோ யாளன் | | | சுலாவுறும் வெப்பு நோயிற் றொடக்குண்டான் றக்க னென்பான் |
|