| (இ - ள்.) இருளாகிய ஆணவமலத்தானே அணுகுதற்கியலாத ஒளிப்பிழம்பாகிய இறைவனே உயிர்க்கு எக்காலத்தும் உறவாயிருப்பவன் இருளாகிய அவ்வாணவமலமே எக்காலத்தும் உயிர்க்குப் பகையாயிருப்பதாம். அம்மலச் சார்பினாலே உயிர் இருவினைகளையும் எப்பொழுதும் ஈட்டிக் கோடற்குக் கருவியாக அமைந்திருப்பது உடலேயாகும். எனவே தேவர்முதல் ஓரறிவுயிர் ஈறாக உள்ள எத்தகைய பிறப்பினும் உடல் உயிர்கட்குப் பகையே யாம். (வி - ம்.) இருண் மலம் - பண்புத்தொகை. சோதி - இறைவன் உயிர் என்பது வருவித் தோதுக. நல்வினையும் பிறப்பிற் கேதுவாகலான் வினைகள் என்றார். (321) | | ஆதலாற் றேவர் தேவர்க் கருள்புரி தேவ ரேனும் | | | ஓதுறு முடலுக் கேன்ற வூழ்வினை யுடலுற் றன்றிப் | | | போதரா தற்றே லேனைப் புலவரைப் புவியி னோரை | | | மாதுயர்ப் படுத்துச் சேறல் வல்வினைக் கரிய தன்றே. |
(இ - ள்.) இங்ஙனமாதலின் தேவரேயாக, அத்தேவர்க்கு வரந்தருந் தேவதேவரேயாக அவரவர் மேற்கொண்டுள்ள உடல் முகந்து கொண்ட ஊழ்வினைகளின் பயனை அவ்வவ்வுடல் நுகர்ந்தன்றித் தீர்தலில்லை. அங்ஙனமாயின் மற்றைய தேவரையும் மண்ணுலகத்தோரைப் பெருந்துயரத்திற் காளாக்கிப் போதல் வன்மையுடைய அவ்வினைகட்கு அருமையாகுமோ. (வி - ம்.) ஓதுறுமுடல் - முற்கூறப்பட்ட உடல். அற்றேல் - அங்ஙனமாயின். புலவர் தேவர். (322) | | கருவினின் மழவிற் கற்குங் காலையிற் பருவ மாறில் | | | பெருகிய பொழுதி னோயிற் பிரிவினிற் பகையி னீட்டும் | | | பொருள்வயின் வேட்ட தெய்தாப் புன்மையின் முதுமை தன்னில் | | | மருவிய திழப்பிற் சாவின் வன்றுயர் மனித்தர்க் குண்டே. |
(இ - ள்.) தாயின் கருப்பையிலிருக்கும் பொழுதும், இளங்குழவிப் பருவத்தினும், கற்கும் பருவத்தினும், கார் முதலிய ஆறுபருவ காலங்களினும், காலைமுதலாகப் பெருகிய சிறுபொழுதுகளினும், நோய்வாய்ப்பட்டுழியும், அன்பரைப் பிரியுங்காலத்தும், பகைமையிலும், பொருளீட்டுங் காலத்தும், விரும்பியபொருளைப் பெறமாட்டாத வறுமைக்காலத்தும், முதுமைக்காலத்தும், பெற்றபொருளை இறக்க நேர்ந்தபொழுதும், சாக்காட்டினும் மனிதராய்ப் பிறந்தோர்க்குக் கொடிய துன்பங்கள் உளவாதல் கண்கூடு. (வி - ம்.) மழவு - இளங்குழவிப்பருவம். பருவம் - கார் முதலியன. பொழுது - விடியல் முதலியன. புன்மை - வறுமை. (323) | | விதித்தன வாண்டு நூறு மேவரி தாண்டு சில்ல | | | கதித்திடு மிளமை தின்னுங் காமநோய் சில்ல தின்னும் |
|