பக்கம் எண் :

548தணிகைப் புராணம்

(இ - ள்.) அகத்தியனே! தீவினைசெய்து நிரயத்தில் அழுந்தியுழன்ற தீவினையாளர் உயிர் அவ்வினைப்பயன் நுகர்ச்சி முடிந்தவளவில் அவ்விடத்தினின்று மகன்று ஆழ்ந்த விரிந்த நீரையுடைய கடல் சூழ்ந்த இம்மண்ணுலகத்தே வாழும் மர முதலிய பிறப்பிலுற்றுக் கால அடைவிலே மெல்ல உயர்ந்து மானிடப் பிறப்பைப் பொருந்தும். அங்ஙனம் மானிடராங்காலும் குணறலம் உறுப்பு நலம் பொருந்துஞ் செல்வநலம் முதலிய நலங்கள் பெறாமல் ஈண்டுந் துன்பமே யுழக்கும் காண்.

(வி - ம்.) அள்ளல் - நரகம். அருந்தல் - நுகர்தல். பள்ளக் கடல், விரிநீர்க் கடல் எனத் தனித்தனி கூட்டுக. ஓரறிவுயிரினின்றும் ஐயறியுயிர் வரை மெல்ல வுயர்ந்தென்க. நவை - துன்பம்.

(335)

 பரனைக் குருவை யவமதித்தோர் பவ்வீக் கிருமி யுருக்கொள்வர்
 ஒருவற் கரிய முயலகநேர யுழப்ப ரவரை யிழித்துரைத்தோர்
 குரவன் பணியை யன்பன்றிக் குயின்றோர் மந்த ராய்த்தளர்வர்
 குரவன் பணிசெய் குநர்க்கலைப்போர் கோம்பி யுருவாய்ப்
 பகைக்கழிவார்.

(இ - ள்.) இறைவனையாதல், ஆசிரியனையாதல் இகழ்ந்தோர் மலப் புழுவாகப் பிறப்பர். அவ்விருவரையும் வைதவர் நீக்கற்கரிய முயலக நோயுற்று வருந்துவர். ஆசிரியன் பணியை அன்பில்லாமற் செய்தவர் மந்தராகப் பிறந்து தளர்வர். ஆசிரியன் பணியாளரைக் கலைப்பவர் கோம்பியாய்ப் பிறந்து பகையினால் வருந்துவர்.

(வி - ம்.) பவ்வீ - இடக்கரடக்கு. குயின்றோர் - செய்தோர். மந்தர் - அறிவுக் கூர்மையில்லாதோர். கோம்பி - ஓந்தி.

(336)

வேறு

 சினந்தகுர வற்சினந்தோன் சிரநோய
           னந்தணனைச் செகுத்த பாவி
 இனைந்தழியுங் கயநோய னரியலார்ந்
           தவன்பழுதா ரெயிற்றன் குந்தி
 தனங்களவிற் கவர்ந்தவனா ரியன்மனையைத்
           தழுவினோன் குட்ட நோயன்
 மளங்களிப்பத் தெய்வதிர வியங்கவர்ந்தோ
           னச்சரவ வடிவ னாவன்.

(இ - ள்.) தன்னை வெகுண்ட ஆசிரியனை வெகுண்டவன் தலை நோயுடையனாவன். அந்தணனைக் கொன்ற தீவினையாளன் வருந்தி அழிதற்குக் காரணமான கயநோயாளன் ஆவன். கள்ளுண்டோன் பழுதுபட்ட பல்லுடையோன் ஆவன். பொன்னைக் களவு கொண்டோன் சொத்தை நகமுடையோன் ஆவன். ஆசிரியன் மனைவியைத் தழுவினோன் குட்டநோயுடையவன் ஆவன். தன் நெஞ்சங் களிக்கும்படி இறைவன் பொருளைக் கவர்ந்துகொண்டோன் நச்சுப்பாம்பாகப் பிறப்பன்.