| (வி - ம்.) செகுத்த - கொன்ற. அரியல் - கள். குநகி - சொத்தை நகமுடையோன். (337) | | மாயனையெள் ளினன்கோம்பி யறமறந்தான் | | | பூத்தமட மாதொ டார்வம் | | | நேயமொடு முரைபகர்ந்தா னாய்புலைய | | | னுருக்கொள்வர் நேர்ந்த செம்பொன் | | | தூயவர்க்குக் கொடானீகை பகர்ந்துதவான் | | | வலையனிவர் சூலின் மாய்வர் | | | மேயவிள மையின் மாய்வர் காளையிற்பல் | | | விழைவுடற்ற விளிந்து போவர். |
(இ - ள்.) திருமாலை இகழ்ந்தவனும் அறச்செயலை மறந்தவனும், பூப்புப்பொழுதிலே மகளிரொடு விருப்பத்தோடும் அன்போடும் உரையாடியவனும் நாயாகவாதல் புலையனாகவாதல் பிறப்பர். எதிர்ப்பட்ட தூயவர்க்குச் செம்பொன் கொடாதவனும், தருவதாகக் கூறிப்பின்னர்க் கொடாதவனும் வலையாலுயிர் கொன்றோனும் ஆகிய இவர் நிரலே தாயின் கருவிலும், பொருந்திய குழவிப்பருவத்தினும், காளைப்பருவத்தினும் பல்வேறு அவாக்கள் வருத்த இறந்தொழிவர். (வி - ம்.) மாயன் - திருமால். ஈகை பகர்ந்து - ஈவதாகக்கூறி. வலையன் - வலையாலுயிர் கொன்றோன். (338) | | பொழிறடிந்தோர் தடந்தூர்த்தோர் புலானுகர்ந்தோ | | | ருறுப்பழுகும் புரைநோ யாளர் | | | கழிசிறப்பி னைவகையா கத்தொன்று | | | முஞற்றார்கற் புனடயா ளுள்ளம் | | | அழியவரை வின்மகளிர்ப் புணர்வாருந் | | | தெய்வமெனு மன்பி லில்லைத் | | | தழியினருங் கேழலொரு குடிப்பிறந்தாட் | | | டழீஇயினர்புண் டலைநா யென்ப. |
(இ - ள்.) பூம்பொழில்களை அழித்தவரும் குளத்தைத் தூர்த்தவரும் புலாலுண்டவரும் உறுப்புக்கள் அழுகுதற்குக் காரணமான குட்ட நோயுடையராவர். மிக்க மாண்புடைய கருமவேள்வி முதலிய ஐவகை வேள்வியில் ஒரு வேள்வியேனும் செய்திலாதாரும், கற்புடைய மனையாள் நெஞ்சழியும்படி விலைமகளிரைப் புணர்வோரும், கணவனே தெய்வமென்னும் பேரன்பில்லாத மனைவியைப் புணர்ந்தவரும் பன்றியாய்ப் பிறப்பர். தம் குடியிலேயே பிறந்த தையலைப் புணர்ந்தவர் புண்பட்ட தலையினையுடைய நாயாகப் பிறப்பர். (வி - ம்.) கழி - மிகுதி. ஐவகை யாகம் - முற்கூறப்பட்ட கரும வேள்வி முதலியன. கணவனே தெய்வம் எனும் அன்பு என்க. ஒரு குடி - தாயத்தார்குடி. (339) |