பக்கம் எண் :

550தணிகைப் புராணம்

 தருமம்வரல் கருதாது பொருண்மதித்துப் பிறரறச் சாலைகள்காப்போரும்
 திரிதருமிம் மைப்பயனை மதித்திறையா லயப்பூசை செய்வித் தோரும்
 பருவருநா யொடும்புலைய வுடலெடுப்பர் தமக்கன்றிப் பரர்க்கு நல்கும்
 குருபரனை யிழித்தோரும் பங்குகுரு டாவர்செவி டாவர் கேட்டோர்.

(இ - ள்.) அறப்பயன் வருதல் கருதாமல் தமக்குப் பொருள் வருதலையே கருதிப் பிறருடைய அறக்கோட்டங்களைக் காவல் செய்வோரும், உழலாநின்ற இப் பிறப்பின்கண் பயன் வருதலையே கருதி இறைவன் திருக்கோயிலில் வழிபாடும் விழவும் செய்விப்போரும் துன்புற்றுழலும் நாயாகப் பிறந்து பின்னர்ப் புலையராகவும் பிறப்பர். தமக்கன்றிப் பிறர்க்கு அறிவு வழங்கும் நல்லாசிரியனை இகழ்ந்துரைத்தோர் முடவரும் குருடரும் ஆகப் பிறப்பர். ஆசிரியனை இகழ்ந்துரைத்தலைக் கேட்டு வாளாவிருந்தோர் செவிடராய்ப்
பிறப்பார்.

(வி - ம்.) காத்தல் - அறக்கோட்ட வினைகளைக் கண்காணித்தல். இம்மைப் பயன் - பொருட்பேறு புகழ் முதலியன. பருவருதல் - துன்புறல். பரர் - பிறர். பங்கு - முடம்.

(340)

 ஆரியனை யெளியனென வெண்ணினவ னற்றவிழிக் கிருமி யாவன்
 சேருநர வுருவினிற்புண் ணுறுகுறியு முளனெண்மை செப்பி னோன்கை
 தீருமுறுப் பிலியாவன் சிவனேவற் றேவர்களைப் பூசை செய்யான்
 வாரமறு மலியாவ னொக்கறழான் வறங்கூர்ந்து கண்ணோ யாள்வன்.

(இ - ள்.) நல்லாசிரியனை அறிவில் ஏழை என நினைத்தவன் கண்ணில்லாத புன்புழுவாகப் பிறப்பன். அவனே பின்பு சேராநின்ற மனிதப் பிறப்பின்கண் புண்ணுடைய ஆண்குறியையும் உடையனாவான். ஆசிரியன் ஏழ்மையுடையன் எனக் கூறியவன் கையில்லாதவனாவன், சிவபெருமானுடைய பரிவார தெய்வங்களை வழிபடாதவன் காதலற்ற அலியாகப் பிறப்பன், சுற்றத்தாரைப் பேணாதவன் வறுமை மிக்குக் கண்ணோயு முடையவன் ஆவன்.

(வி - ம்.) விழியற்ற கிருமி என்க. அவன்பின் சேருநரவுருவினில் என்க. ஏவற்றேவர் - பரிவாரதேவதைகள். வாரம் - அன்பு; காதலென்க. ஒக்கல் - சுற்றத்தார். தழான் - தழுவாதவன், வறம் - வறுமை.

(341)

 அருந்தவரைத் தானுண்ட பின்னூட்டி
           னோனெஞ்சி னடர்வெந் நோயன்
 விருந்தினரைப் புறந்தரான் கபோலத்தின்
           வெய்துயிர்க்கு நோய னுண்டி
 கரந்துநுகர்ந் தானுதரக் கனன்மந்த
           னடுப்பிழைத்துக் கரந்தான் வாயின்
 அரந்தைபடு புணணுடையன் கற்புடையா
           டனைவெறுத்தா னரலைக் கண்டன்.