| (இ - ள்.) செயற்கரிய தவவொழுக்கமுடையோரைத் தானுண்ட பின்னர் ஊட்டியவன் நெஞ்சின்கண் வருத்தும் நோயுடையனாவான். விருந்தினரைப் பேணாதவன் கவுளின்கண் வெய்தாக வுயிர்த்தற்குக் காரணமான நோயுடையன் ஆவன். உணவினைப் பிறர்காணாமே மறைந்திருந்துண்டவன் வயிற்றுத் தீயவிந்தவனாவான். நடுவுநிலைதவறிச் சான்று கூறமறுத்து ஒளித்தவன் வாயின்கண் வருத்தந்தரும் புண்ணுடையன் ஆவன். கற்புடைய மனையாளை வெறுத்தவன் கழலை கட்டிய கழுத்துடையன் ஆவன். (வி - ம்.) கபோலம் - கவுள். உணவினை விருந்தினர்க்குத் தெரியாமற் கரந்து நுகர்ந்தான் என்க. உதரக்கனல் - வயிற்றுத்தீ. அரலை - கழலை. (342) | | நோயலைப்பத் தனையடைந்த பெரியோரைப் | | | புறந்தரா னொய்மைச் சுற்றம் | | | தாயுயிர்த்தான் குடிவருதொன் மையரிவரைத் | | | தாங்காதான் றசையூன் கோடற் | | | காயபெருஞ் சூழ்ச்சியினான் கள்வனவன் | | | றனக்கியைந்தா னனைவர் தாமும் | | | மேயவிழி நோயினரா யடித்துணையில் | | | விண்ணெனும்புண்ணுடைய ராவர். |
(இ - ள்.) நோய் வருத்துகையானே தன்பால் வந்து புகல்புக்க சான்றோரைப் பேணாது புறக்கணித்தவனும், வறியசுற்றத்தார், தாய் தந்தை தன்குடியிற் றோன்றிய பாட்டன் முதலிய முதியோர் என்னுமிவரைப் பாதுகாவாதவனும், பிற வுயிரின் தசை ஊன் முதலியவற்றைக் கொள்ளற்குரிய சூழ்ச்சியினை யுடையோனும், கள்வனும், அவனோடு இணங்கியவனும் ஆகிய இவரெல்லாம் பொருந்திய கண்ணோயுடையராகவும் கால்களிரண்டினும் விண்ணெனத் தெறிக்கும் கொடிய புண்ணுடையராகவும் ஆவர். (வி - ம்.) நொய்மை - ஈண்டு வறுமை. தாயையும் உயிர்த்தவனையும் என்க. உயிர்த்தான் - தந்தை. (343) | | தீம்புனற்பந் தரைச்சிதைத்தா னுதரநீர்க் | | | கோவையனான் செகுத்தான் றோற்றம் | | | ஆம்பொழுதே விழியிலா னான்வருத்தி | | | னான்கோண னாசி யாவன் | | | ஓம்பலுறு மூனாதி யூணுகர்ந்தா | | | னுறுகண்ட மாலி யாவன் | | | தேம்புகலாம் விளைத்திடுவா னழுகல்வா | | | யினன்புலையன் சினமீக் கொண்டான். |
|