பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்55

 திறந்தகீழ் மடைகள் சிக்கெனச் சிறைத்துச்
           செறித்தமேன் மடைகளைச் சீத்து
 விறந்தநீர் பரவ முளைப்புனல் பாய்த்தி
           விழுமிய விடரொரீஇப் புரப்ப
 நிறந்தழை மதிபோல் வெள்ளொளி விரிக்கு
           நென்முளை முழுவது மதியின்
 உறைந்தபைங் கிரண மெனப்பசந் தெழுந்தாங்
           குயர்வன பண்ணைக டோறும்.

(இ - ள்.) திறக்கப்பெற்ற முளைநீர் கவிழ்க்கும் கீழ்மடைகளைச் சிக்கெனத் தடைப்படும்படி அடைத்து மேலேயடைக்கப்பட்ட மடைகளைத் திறந்து மிகுந்த நீர் எங்கும் பரவும் வண்ணம் முளைநீர் பாயச்செய்து மிக்க துன்பத்தை நீக்கிக் காக்க நிறந்தழைக்கப்பெற்ற சந்திரனைப் போல வெள்ளிய ஒளியைப் பரப்புகின்ற நென்முளை முழுவதும் சந்திரனிடத்துத் தங்கிய களங்கம் விரவிய கிரணமென்று சொல்லும்படி பச்சைநிறங் கொண்டு ஆண்டுள்ள வயல்க டோறும் உயர்ந்து
வளர்வனவாம்.

(வி - ம்.) சிறைத்து - தடைப்படுத்தி; சீத்து - திறந்து; விறந்த - செறிந்த; 'விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே' என்னும் (தொல், உரி.) சூத்திரத்தானறிக. மதியின் பைங்கிரணம் - களங்கத்தோடு கூடிய கிரணம்.

(91)

வேறு

 நாறு பறித்துக் குணின்மோதி நறுநீ ரலைத்து முடிசெய்த
 வேறு நிலத்தி னுழத்தியர்கள் விரவிப் பதிப்ப வளர்தோற்றம்
 கூறு படுத்தி வதியுடலங் குற்றங் களைந்து கூற்றொழிப்பப்
 பேறு கதுவ வேற்றுடலம் பெய்து செழிக்கு முயிர்போலும்.

(இ - ள்.) மள்ளப் பெண்கள் ஒருங்குகூடிப் பிடுங்கி மண்ணைக் குறுந்தடியி லடித்துப் போக்கி நன்னீரி லலைத்துக்கட்டப்பட்ட நாற்றினை வேறு புலங்களில் நட வளருங் காட்சியினால் இயமன்முன்னர்த் தங்கிய உடம்பினின்றும் வேறுபடுத்தி அவ்வுடம்பு மொண்டுகொண்டனுபவித்த வினையை நீக்கிவிட நல்வினை வருதலால் வேறோருடம்பைக் கூடிச் செழிப்பையடையும் உயிர்வருக்கம் போலும்.

(வி - ம்.) குணில் - குறுந்தடி; முடிசெய்த - தொழிற் பெயர்; உடலங்கூறுபடுத்தியென மாற்றுக; குற்றங்களைதல் - குற்றத்திற்குத் தகவொறுத்தல்; கூற்று - இயமன்; உடம்பினின்றுமுயிரைக் கூறு படுத்தலின் கூற்றனெனப் பெயர்பெற்றனனென்க; பேறு - நல் வினைப் பயன்; கதுவ - பொருந்த; பெய்து - பெய்ய - எச்சத்திரிபு.

(92)

 வித்து நிலத்தின் வெறுத்தபயிர் விறப்பி னீங்க விடைவாங்கிப்
 பைத்த நிலத்தி னகன்றபயி ரகல்வி னீங்கப் பதித்தோம்பும்