| | மைத்த வுடலி னுழவர்வினை மாற்றி யூட்டி யினிதளிக்குஞ் | | | சுத்த னிகர்த்தார் பணையெல்லாந் தோற்றத்திலங்கு முயிர்போன்ற. |
(இ - ள்.) (கைவிதைப்பாக) விதைத்த நிலத்தின்கண் செறிந்த பயிர்கள் அச்செறிவினின்றும் நீங்க இடையிடையே பறித்து விரிந்த நிலத்தின்கண் அகற்சியுற்றுள்ள பயிர்கள் அவ்வகற்சியினின்று நீங்கும் படி நடுதலைச்செய்து பாதுகாக்கும் கரிய உடலினையுடைய உழவர்கள் வினைப்பயன்களைச் செய்த முறையன்றி மாற்றிப் போகத்தை யுண்பித்துக் காக்கும் சுத்தனாகிய சிவபெருமானை யொத்தனர். வயல்களெல்லாம் உடம்போடு கூடி விளங்கும் உயிர் போன்றன. (வி - ம்.) வித்துநிலம் - கைவிதைப்பு விதைத்தநிலம்; வெறுத்த - செறிந்த; விறப்பு - செறிவு; பைத்த - விரிந்த; அகன்றபயிர் - நெருக்கமில்லாது கலந்துள்ள பயிர்; அகல்வினீங்கல் - நெருங்கல்; மைத்த - கரிய; வினைமாற்றி ஆன்மாக்கள் செய்த வினைப்பயனைச் செய்த முறையன்றி மாற்றி; இதனை நந்தியுபதேசப்படலம் 15ஆவது செய்யுளில் "புரிதரு முறையிற் பிறழ்ந்துயிர் தெய்வம் பூதமென் றிவற்றினு ளொன்றான்" எனக் கூறியிருத்தலைக் கொண்டறிக. ஊட்டி - அப்போகத்தை யுண்பித்து; சுத்தன் - நிருமலனாகிய சிவபெருமான்; தோற்றம் ஈண்டுடம்பு. (93) வேறு | | வீண்பட லொழிகென மிதித்த பூந்தழை | | | ஏண்படு தன்னுரு விறந்து பைம்பயிர் | | | மாண்பட வளர்ப்பன மாய்ந்துந் தக்கவர் | | | பூண்பரா லுதவியென் பொருள்வி ளைக்குமே. |
(இ - ள்.) (முதிர்ந்து முதிர்ந்து) வீணாகக் கழிதலை நீங்குகவென்று (உழவர்கள்) காலால் மிதித்த பொலிவுபெற்ற தழைகள் யாவராலு மெண்ணப்படுகின்ற தம்முடைய வடிவங்கெட்டுப் பசிய பயிர்கள் மாட்சிமைப்பட வளர்ப்பன தகுதியுடைய பெரியார் தாங்கள் இறந்தும் பிறர்க்குதவி செய்தலை மேற்கொள்வார்கள் என்கிற பொருளைக் காட்டும். (வி - ம்.) ஏண்படு - எண்ணப்படுகின்ற விகாரம்; மாண்பட - மாட்சிமைப்பட; என் - என்கின்ற; விளைக்கும் ஈண்டுக் காட்டுமெனப் பொருள் கொள்க. மாய்ந்தும் உம்மை எச்சவும்மை; இறந்தும் உதவி புரிதலைச் ததீசி முதலியோர் மாட்டுக் காண்க. (94) | | கோசலம் விராய்க்குளம் பழுந்திச் சேறதாய் | | | மாசென வழித்தெறிந் துலர்ந்த வாப்பியும் | | | பூசலோ டுழவர்கள் போதர் வார்பழி | | | ஆசிலார்க் கடுப்பினு மாய்ந்து ளோர்விடார். |
(இ - ள்.) குற்றமற்ற நல்லோர்க்குப் பழியடுத்ததாயினும் நூல்களை யாராய்ந்த நல்லோர் அவரைக் கைவிடார். அதுபோலக் கோமயத் |