பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்57

தோடு கலந்து குளம்பினால் நிலத்தில் அழுந்தப்பெற்றுச் சேறாகிக் குற்றமுடைய தென்று வழித்தெறிதலால் உலர்ந்த சாணத்தினையும் உழவர்கள் ஆரவாரத்தோடு வயல்களுக்கு அள்ளிக்கொண்டு செல்வார்கள்.

(வி - ம்.) கோசலம் - பசுவினீர்; ஆப்பி - சாணம்; எறிந்து - எச்சத்திரிபு; பூசல் - முழக்கம்; போதருவார் என்பது விகாரமாயிற்று.

 பரம்புபல் லுயிர்தொறும் பாகத் தெல்லையிற்
 புரம்பொடித் தவனருள் பொருந்துந் தன்மைபோல்
 வரம்பின தெல்லையின் மண்டு காற்புனல்
 நிரம்பிநின் றதுநெடும் பணைக டோறுமே.

(இ - ள்.) (இருநூற்றிருபத்து நான்கு புவனங்களிலும்) பரவியுள்ள பல ஆன்மாக்கடோறும் (அவ்வான்மாக்களுக்குரிய) பக்குவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவில் திரிபுரத்தை யெரித்தவனாகிய இறைவன் றிருவருள் பொருந்தி நிற்குந்தன்மைபோல வாய்க்கால் வழியாக வந்து செறிந்த நீரானது நீண்ட வயல்கடோறும் வரம்பினளவாக நிறைந்து நின்றதென்க.

(வி - ம்.) பரம்பு - பரவிய; பாகத்தெல்லை - பக்குவத்தினளவு; வரம்பின தெல்லையில் - வரம்பினளவில்; இறைவனருள் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப நிறைதல்போல வரம்பினளவாக நீர்நிறைந்து நின்ற தென்க; இஃது உவமையணி.

(96)

 மருவுபல் லுயிருமேல் வளர்க்கும் பைம்பயிர்
 குருகின முன்புபோற் குறுகு றாவகை
 சுருள்விரித் தமன்றுயிர்த் தொகைக ளோம்புவ
 அருளின ரென்றுமவ் வருளிற் றீர்வரோ.

(இ - ள்.) (உயிர்கள் மாட்டு) அருளுடைய பெரியோர் எக்காலத்திலும் அவ்வருட் குணத்தினின்றும் நீங்கார். (அதுபோல) (உலகின் கட்) பொருந்திய பல உயிர்த்தொகுதியையும் விளைந்த பின்னர்க் காத்தலைச் செய்யும் பயிர்கள் பறவைக் கூட்டங்கள் (பயிராக இருக்கும் காலத்து வந்து மீன் முதலியவற்றை உண்ண அடைவதுபோல) அடையாவண்ணம் குருத்தை விரித்து நிறைந்து மீன்ஞெண்டு முதலிய உயிர்க் கூட்டங்களைப் பாதுகாப்பனவாம்.

(வி - ம்.) அமன்று - நிறைந்து. "பயிர்கள் விளைந்த பின்னர் உயிர்களைக் காத்தலன்றிப் பயிராக இருக்கும் காலத்தும் மீன் முதலிய வகைகளைக் காத்தலால், "என்றுமவ் வருளிற்றீர்வரோ" என்றார் உயிர்த்தொகை - மீன்ஞெண்டு முதலியன. எடுத்துக்காட் டுவமையணி.

(97)

 எடுத்ததோ ருடலுயி ரிகவு முற்றினும்
 அடுத்தவா ணவத்தின்மீட் டாதல் போன்மெனக்
 கெடுத்தமா மலர்முதல் கிழங்கு நிற்றலின்
 விடுத்தெழுந் தெங்கணு மிடைதன் மேவுவ.