(இ - ள்.) ஆன்மா கன்மத்திற் கீடாக எடுத்ததாகிய ஒப்பற்ற உடலானது நீங்கினும் (ஆன்மாவிற் சமநிறைவாக) நிறைந்த ஆணவ மல சம்பந்தத்தினால் மீட்டும் அவ்வுடல் தோற்றுதல் போலுமென்று ஆன்றோர் கூறுவதற்கேற்ப, முன்னரழித்த மலர்முதலும் கிழங்கும் கெடாது நிற்றலின், (அக்கிழங்கினை) விடுத்து எழுந்து எவ்விடத்தினும் மலர்கள் நிறைதலைப் பொருந்துவனவாம். (வி - ம்.) உயிரானது உடலை நீப்பினும் ஆணவத்தால் மீட்டுமவ்வுடல் தோன்றுதல்போல மலர்முதலும் கிழங்கும் நிற்றலால் மேவுவ என்க. இகவு முற்றினும் - நீங்குத லடையினும். மிகுத்த - நிறைந்த. முதல் - வேர். வேர் உயிர்க்கும், கிழங்கு ஆணவத்திற்கும், மலர், உடம்பிற்கும் உவமையாகக் கொள்க. மலர்மேவுவ என முடிவுசெய்க. போலும் என்பது மகரக் குறுக்கம். (98) | | அளமரு பிறப்புக வமலர்க் குய்த்திடும் | | | வளமலர் களையென வழங்கப் பட்டன | | | *விளறருந் தகையரு மிடைந்தொ ருத்தர்பால் | | | தளர்வுசெய் வாரெனிற் றாழ்க்கற் பாலரே. |
(இ - ள்.) வெள்ளறிவு சிறிதுமில்லாத பெருந்தகையுடைய பெரியாரும் ஒருவர் பக்கலின் நெருங்கி அவருக்குத் துன்பஞ் செய்வாராயின் தாழ்வு செய்யும் பகுதியுடையோராவர். ஆதலால் (மேலும் கீழும் கொள்ளி வட்டமும் காற்றாடியும்போற்) சுழலுகின்ற பிறவிகெட, மலமற்றவனாகிய சிவபெருமானுக்கு (அர்ச்சனை செய்து) சேர்க்கும் அழகையுடைய மலர்கள் (பயிர்க்கு இடையூறு செய்தலால்) களையென்னும் பெயரால் வழங்கப்பட்டன. (வி - ம்.) வளம் - அழகு. அளமருதல் - சுழலுதல்; போலிகளையென - களைந்தெறிவாயெனவும் பெயராகவும் கொள்க. விளறு - வெண்மை. அருமை : இன்மைமேற்று. அருங்கேடன் என்றாற்போலக் கொள்க. (99) | | அரிய லார்ந்த வனந்தரு ளத்தினான் | | | மருதம் பாடும் வயற்றலை யாடவர் | | | பருவங் காட்டலும் பாய்களை கட்பச்செல் | | | கரிய வாட்டடங் கண்ணிய ரெங்கணும். |
(இ - ள்.) கள்ளினை யுண்டதனால் வந்த மயக்கம் பொருந்திய மனக்களிப்பால் மருதப்பண்ணைப் பாடாநின்ற வயலிடத்திலுள்ள மள்ளர்கள் (களை களையும்) பக்குவத்தைக் காட்டப் பரவிய களைகளைக் களையச் செல்லுகின்ற கரிய வாள்போலும் பெருமை பொருந்திய கண்ணையுடைய கடைசியர்கள் எங்கணுமுள்ளார். (வி - ம்.) அரியல் - கள். அனந்தர் - மயக்கம். உளம் - ஈண்டுக் களிப்பை உணர்த்தலால் ஆகுபெயர். இதனை, "அரியலார்ந்தமர்தலின் அனந்தர் நோக்குடைக், கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர், |