வரிவராற் பிறழ்வயல் குவளை கட்பவர்" என்னும் சிந்தாமணி (பதுமை. 83) செய்யுளா னறிக. மருதம் - மருதப்பண். பாய் - பரவிய. கட்ப - களைய. தடம் - பெருமை. "தடவும் கயவும் நளியும் பெருமை" என்னும் தொல்காப்பியத்தா னுணர்க. உள்ளார் என ஒருசொல் வருவித்து முடிக்க. (100) | | பணைம லர்க்களை பற்றிப்ப றித்தலும் | | | பிணைய னம்பெடை யோடிரி வுற்றன | | | விணைம லர்க்குல மென்னக் கவற்றுவார் | | | துணையு நம்மையு மென்று துணிந்தென. |
(இ - ள்.) (கடைசிமார்) வயல்களில் மலராகிய களைகளைக் கையாற் பற்றிப் பறிக்க (அதனையறிந்த) விருப்பினையுடைய அம்மலரிலிருந்த அன்னச் சேவல்கள் (நடையாலொக்கும்) நம்மையும் ஒன்றோடொன்றிணைந்த மலர்க்கூட்டங்களை வருத்துதல்போல வருத்துவார்களென்று துணிந்தாற்போல் பெட்டை யன்னத்தொடு செல்லுதலுற்றன. (வி - ம்.) துணையும் நம்மையும் மலர்க்குலமென்னக் கவற்றுவார் என்று துணிந்தனபோல இரிவுற்றன என்க. துணை - ஒப்பு. துணிந்தென - துணிந்தாற்போல. (மள்ளப்பெண்கள்) வயல்களிலுள்ள மலராகிய களையைக் (கையாற்) பற்றிக் களைந்த காலத்தில் அம்மலர்களிலே சேர்ந்திருந்த அன்னச்சேவல்கள் அவரை நடையாலொத்திருக்கும் நம்மையும், மலர்க்கூட்டங்களைக் களைந்தாற்போல, வருத்துவார்களென்று துணிந்தாற்போலத் தம் பெட்டை யன்னங்களோடு ஓடின என்க. (101) | | செங்கை தாடி தலைக்குய மானனம் | | | பொங்கு தாமரைப் போதெனற் கேற்புறப் | | | பங்க மோடு பயின்றன கட்டுலாம் | | | அங்க ணாற்றுக்கா லாட்டியர்க் கென்பவே. |
(இ - ள்.) அம் மருதநிலத்தின்கண் களைகளைந் துலாவுகின்ற கடைசியர்க்குச் செம்மை நிறம்பொருந்திய கரங்களும், தாள்களும், தேமலோடு கூடிய தனங்களும், முகங்களும் அழகுமிகுந்த தாமரை மலரென்று (கவிகள்) சொல்லுதற்குப் பொருந்த அவ்வுறுப்புக்கள் சேற்றோடு பழகியிருந்தன. (வி - ம்.) திதலை - தேமல். குயம் - தனம். ஆனனம் - முகம். கட்டு - களைந்து. ஆற்றுக்காலாட்டியர் - மருதநிலப் பெண்கள். "பங்க மோடு பயிறல் கைகால் முதலிய அவயவங்களிற் சேறுதங்கப் பெற்றிருத்தல். தாமரைக்குப் பங்கயமென்னும் பெயர் காரணக் குறியாம். (102) | | பகைமை தோன்றப் பறித்தடு காலையும் | | | முகைஞெ ரிந்தமு டிப்பன மோப்பன | | | தகைக ளுண்பன சாத்துய ரேய்க்கினும் | | | அகைந லத்தனுங் காரமைந் தாரரோ. |
|