(இ - ள்.) கல்வியறிவொழுக்கங்களா னமைந்த சான்றோர் சாதற்கேதுவாகிய துயரை (தம்மிடத்தொருவர்) வருவிப்பாராயினும் (தங்களுக்குரிய) உயர்ந்த நன்மைக்குணத்தினின்றும் குறையார். அதுபோலக் கடைசியர்களால் பகைமை வெளிப்படக் கையாற் பறித்து வருந்துகின்ற காலத்தும் (அவர்களால்) நெரிந்த அரும்புகள் முடிக்கப்படுவனவாயும் மோக்கப்படுவனவாயும் அழகிய கன்ளுண்ணத்தக்கனவாயுமிருந்தன வென்க. (வி - ம்.) ஏய்க்கினும் - பொருந்தினும். அகை - உயர்ச்சி. "அகைத்தல் வேதனையடர்த்தல் அறுத்திட லுயர்த்தலாமே" என்னும் நிகண்டானறிக. அமைந்தார் - கல்வியறிவொழுக்கங்களா னமைந்தார் தகைக்கள் என்பது எதுகை நோக்கி இயல்பாயிற்று. (103) | | மதுநு கர்ந்தம யக்கினர் பாங்குளார் | | | வதன மாதி களையென வௌவுவார் | | | கதிய தம்படை காய்பகை போற்செயும் | | | முதுமை யத்திர மூழ்குநர் போன்றுளார். |
(இ - ள்.) வேகத்தையுடைய தம்முடைய சேனைகளையே தம்மைக் கொல்லும் பகைபோலக் கருதும் வண்ணம் மயக்கம் செய்யும் பழைய மயக்கத்தின் முதிர்வைத் தருகின்ற மயக்கக்கணை (மோகனாத்திரம்) யாலே மூழ்கியவரைப் போன்றவர்களாகிய மள்ளப் பெண்கள் கள்ளையுண்ட மயக்கத்தினை யுடையவர்களாய்ப் பக்கத்துள்ள பெண்களினுடைய முகமுதலிய அவயங்களைக் களையெனக் கருதி அவற்றைப் பற்றுவார்கள். (வி - ம்.) கதிய - வேகத்தையுடைய. படை - இரண்டாவதன் தொகை. வௌவுவார் - பற்றுவார். மையத்திரம் - மோகனாஸ்திரம். இது மயக்க அணி. (104) | | களையக் கைகளைப் பற்றுதொ றுந்தொழில் | | | உளையப் பூவென் றொளிமுகம் பாய்வன | | | விளைமட் டூட்டலர் வீதனி றுத்துமத் | | | தெளிவைத் தேறிய போற்சிறை வண்டினம். |
(இ - ள்.) சிறகையுடைய வண்டினங்கள், விளைந்த தேனை உண்டாக்குகின்ற பூக்கள் சாதலை (சாவாமல்) நிலைநிறுத்தும் தெளிவை ஆராய்ந்தனபோல, கை களையைக் களையப் பற்றுந்தொறும் பற்றுந் தொறும் (அக்களை பறிக்கும்) தொழில் முட்டுப்படும் வண்ணம் ஒளிர்கின்ற கடைசியர் முகத்தைப் பூ எனக் கருதிப்பாய்வனவாம். (வி - ம்.) வீதல் - சாதல். தெளிவு - நூற்றெளிவு. தொழிலுளைய - தொழில் முட்டுப்பட. பூவென்று எனப் பொருள் கொள்வாருமுளர். இது மேலையணி, (105) | | வயலிற் பாய்வன மாதர்வி ழிக்கயல் | | | வயலி ருங்கயல் வாண்முகம் பாய்வன |
|