| | அலரிற் பாய்வன வாரள கத்தளி | | | அலரின் வண்டள கத்தலர் பாய்வன. |
(இ - ள்.) கடைசியர்கள் கண்களாகிய கயன்மீன்கள் களைகளையும் தன்மையால் வயலிடத்துப் பாய்வனவாம். வயலின்கணுள்ள பெரிய கயன்மீன்கள் அப்பெண்களின் ஒளிபொருந்திய முகத்திற்பாய்வனவாம். இயற்கை மணம் நிறைந்த கூந்தலிலுள்ள வண்டுகள் அவ்வயலிலுள்ள பூக்களிற் பாய்வனவாம். பூக்களிலுள்ள வண்டுகள் கூந்தலின்கணுள்ள பூக்களிற் பாய்வனவாம். இது பரிவர்த்தனை யென்னுமணி. (106) | | எள்ளுங் காற்கிரிந் தாங்களை ஞெண்டுபோம் | | | பள்ள நீரிற் பகட்டுவ ரால்புகும் | | | அள்ளல் கூர்ம மழுந்தும டர்த்தெறி | | | கள்ள வம்புயங் கங்கிற்க விழுமே. |
(இ - ள்.) (தங்களை யொப்பில்லை யென்) றிகழும் அம்மள்ளப் பெண்களுடைய முழந்தாள், கணுக்கால், புறந்தாளாகிய இவைகளுக்குத் தோற்றோடினாற்போல நண்டுகள் வளையிற் செல்லும். ஆழமாகிய நீரில் பெரிய வராலினங்கள் மூழ்கும். சேற்றில் ஆமையழுந்தும். பறித்தெறிகின்ற தேன்களைத் தன்னிடத்தேயுடைய தாமரை மலர்கள் வரம்புகளிற் கவிழ்ந்துகிடக்கும். (வி - ம்.) எள்ளும் - தம்மையிகழும். ஈண்டுத் தம் என்றவை நண்டு, வரால், ஆமை, தாமரை முதலியனவாம். கால், முழந்தாள், கணுக்கால், புறங்கால்களை யென்க. அள்ளல் - சேறு. கள்ள - தேனைத்தன்னகத்துடைய. கங்கு - வரம்பு. அடர்ந்து - பறித்து, (107) | | கமலஞ் செங்கழு நீரனிச் சங்கமழ் | | | குமுதம் வள்ளை கொடிவிடு சைவலம் | | | அமிழ்த மென்மொழி யாற்றுக்கா லாட்டியர் | | | தமது மெய்யினல் லாற்றளை யில்லையே. |
(இ - ள்.) தாமரையும், செங்கழுநீரும், அனிச்சமும், மணம் வீசுகின்ற ஆம்பலும், வள்ளைக்கொடியும், கொடிப்பாசியுமாகிய இவைகள் அமிழ்தன்ன மெல்லிய சொற்களையுடைய கடைசியர்கள் சரீரத்தின்கணன்றி வயலினிடத்தில்லையென்க. (வி - ம்.) தாமரை முதலியன கடைசியர்முகம், கால், கண், வாய், காது, கூந்தல் முதலியவற்றிற்குவமைப் பொருளாதல் காண்க. இவைகளைக் களையாக வேரறக்களைந்தமையால் "தளையில்லை" என்றார். தளை - வயல். தளை : ஏழாம் வேற்றுமைத் தொகை. (108) | | உறுப்பி னுக்கின மாயொளிர் யாவையும் | | | கறுத்த டர்த்த கடைசியர் புன்முதல் | | | இறுத்தெ றிந்தன ரீண்டினஞ் சாடுவோர் | | | வெறுத்தற் கஞ்சுவ ரேமற்றை வேற்றினம். |
|