(இ - ள்.) (தங்கள்) அவயவத்திற்கு இனமாகி விளங்குகின்ற தாமரை முதலிய மேற்கூறிய உவமைப் பொருள்கள் எல்லாவற்றையும் வெகுண்டு கொன்ற மள்ளப் பெண்கள் (அவ்வயலி) லுள்ள புல்முதலிய பொருள்களையும் கொன்றெறிந்தார்கள். இவ்வுலகத்தில் தம்இனத்தைக் கொள்கின்றவர் (தம்மினமல்லாத) வேற்றினத்தைக் கொல்வதற்கஞ்சுவரோ? அஞ்சார் என்க. (வி - ம்.) கறுத்து - கோபித்து "கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. இறுத்து - கெடுத்து. மற்றை - இடைச்சொல். (109) | | மதுநு கர்ச்சியின் வாண்முகஞ் சேந்தன | | | கதுவு நீரிற் கரங்கள்வி ளர்த்தன | | | செதுவ தட்டரு டீம்பயிர்க் கீத்தலாற் | | | புதுமை யீரொளி பூத்தன போன்றன. |
(இ - ள்.) கள்நுகர்தலினால் (கடைசியர்) முகங்கள் சிவப்புற்றன. பற்றுகின்ற நீராற் கைகள் வெண்மை நிறமுற்றன. (கரமும் முகமும்) பயிரினுக்குக் (களையாகி) வருத்தத்தக்கனவற்றைக்கெடுத்து, நல்லபயிர்கட்கு அருளினையீதலால், புதுமையான அடுதலாலுளதாகிய பிரதாபமுமருளானுளதாகிய புகழும் இரண்டொளிகளும் உளவாதலை நிகர்த்தன. (வி - ம்.) உலகத்துப் பகைவரைக் கொன்று தம்மையடுத்தவர்க்கு அருள் செய்வோரிடத்துப் புகழும் பிரதாபமும் சேறலியல்பு. இடையூறாகியகளையை அடுதலால் வீரமும், பயிருக்கு அருள் செய்தலாற் புகழுமாகிய இரண்டொளிகளாற் கரமும் முகமும் பொலிவன போன்றன என்க. புகழுக்கு வெண்ணிறமும், பிரதாபத்திற்குச் செந்நிறமும் கொள்க. இதனை, "தனது கீர்த்தியும் திறற்பிர தாபமும் தரைமேல் அனல்செய் கோபமும் முல்லையுமென எங்குமமைத்து" என்னும் காஞ்சிப்புராணச் செய்யுளானறிக. கதுவும் - பற்றும். ஈரொளி - வீரம்புகழ் இவற்றினொளி. பூத்தன - உண்டாவன. இதனைப் "பொருளற்றார் பூப்பர்" என்னும் குறளானுணர்க. செது - ஆகுபெயர். அது தீமையை யுணர்த்தல் "செதுமொழி சீத்தசெவி செறுவாக" என்னும், கலியானுணர்க. செது அது சுட்டு - தீமையாகிய அதனைத் தொலைத்து. தீம்பயிர்க்கு அருள் ஈத்தலால் எனக் கூட்டுக. (110) | | அன்னத் தோடக நாணவொ துங்குபு | | | கின்ன ரத்தொகை யஞ்சக்கி னந்துபோய் | | | நன்னர்த் தம்வயி னண்ணுவ ராபவே | | | முன்னிப் பண்ணை முழுக்களை கட்டுளார். |
(இ - ள்.) களை களையக்கருதி (வயல்களிற்சென்று) களைகளைந்தவராகிய கடைசியர்கள் அன்னக்கூட்டங்கள் தம் நடையினைக் கண்டு உள்ளத்தினிடத்து நாணமடைய மெத்தென நடந்தும், கின்னரப் பறவைகள் அஞ்சும் வண்ணம் உரையாடிச் சென்றும், அழகு பொருந்திய தம் இல்லங்களிற் சென்று பொருந்துவராவர். |