(வி - ம்.) தோடு - கூட்டம். "தோடுகொள் வேலித் தோற்றம் போல" என்றார் பிறரும். ஒதுங்குபு - நடந்து. கின்னரம் - ஒரு வகைப் பறவை. ஆப - முற்றுச் சொல். முழுக்களை - களையெல்லாம். எஞ்சாப் பொருளுணர்த்தி நின்றது; "முழுதென்கிளவி யெஞ்சாப் பொருட்டே" என்பது தொல்காப்பியச் சூத்திரமாதலான். (111) | | சூறை யாட்டயர் வார்தொலை வெய்தலும் | | | பாறி னோர்படர்ந் தாங்குப் படுகளை | | | கோறல் செய்தவர் நீங்கலுங் கொம்மெனச் | | | சேற றாவயற் செற்றின புள்ளெலாம். |
(இ - ள்.) சூறையாடுதலைச் செய்பவர் (தாங் கருதியதைச் செய்து) நீங்க (இவர்களைக் கண்டஞ்சி) ஓடினார் மீண்டு வந்தமைபோல உண்டாகிய களைகளைக் கட்டவராகிய கடைசியர் நீங்க விரைவாகப் பறவைகளெல்லாம் சேறு நீங்காத வயலினிடத்து நெருங்கின. (வி - ம்.) சூறையாட்டயர்வார் - கொள்ளையிடுதல் செய்வார். பாறினோர் - ஓடினோர். கொம்மென - விரைவுக் குறிப்பு. செற்றின - நெருங்கின. (112) | | கைகள் சீப்புக் களைதொழி னீவுதல் | | | நெய்க டிப்புன லாநில வுந்தலை | | | செய்க ளாகத் திருநில மங்கைதன் | | | மைக ருங்குழ லாவள ரும்பயிர். |
(இ - ள்.) (கடைசியர்கள்) கரங்கள் சீப்பாகவும், களைகட்டுந் தொழில் (தலையைக்) கோதுதலாகவும், வாசனை பொருந்திய நீர் எண்ணெயாகவும், விளங்குகின்ற தலைகள் வயல்களாகவும், நெற்பயிர்கள் அழகிய நில மடந்தையினுடைய கரிய கூந்தலாகவும் வளரும். (வி - ம்.) களை தொழில் - களை பறிக்குந்தொழில். நீவுதல் - தடவுதல். நெய் - எண்ணெய். மை - மேகம். இஃதுருவக அணி. (113) | | ஒளிகண் மாய்ப்ப வொலிதெங்கு பூகதம் | | | துளிமை மாய்ப்பன வாழைதொ குங்கழை | | | வளியின் மண்டில மாய்ப்பன வென்றுதாம் | | | களிறு மாய்ப்பக் கதழ்ந்தெழும் பூம்பயிர். |
(இ - ள்.) தழைத்திருக்கின்றதெங்கும், கமுகமரங்களும், துளித்தலையுடைய மேகத்தினை மறைப்பன ஆகும். வாழை மரங்களும், கரும்புகளும், வாயுமண்டலத்தை மறைப்பனவாகுமென்று கருதி யானைகளை மறைப்ப வேகத்தோடு மேலெழுகின்ற பயிர்கள் தாம் சூரிய சந்திரர்களை மறைப்பனவாகும். (வி - ம்.) இது விற்பூட்டுப் பொருள்கோள். பயிர்கள் ஒளிகள் மாய்ப்ப எனக்கூட்டுக. மாய்தல் - மறைதல். "பகன்மாய்ந்தமாலை மணி |