பக்கம் எண் :

64தணிகைப் புராணம்

விளங்கக்காட்டி" சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்த காதையடிகளானுணர்க. "களிறுமாய்க்கும் கதிர்க்கழனி" என்னும் மதுரைக் காஞ்சி யடியானுமுணர்க.

(114)

வேறு

 எழுந்துவளர் பசும்பயிரின் றோற்றம் நோக்கி
           யெமைப்பொதிந்து துவக்கியுடன் முழுதுஞ் சால
 அழுந்திநனி கண்டூதி யாக்கு மீதென்
           றஞ்யிடை மடக்குவகை யகத்து நாடிச்
 செழுஞ்சுவைத்தெள் ளமிழ்தகிர ணங்க டம்மாற்
           செறிகருப்பக் கனமுறுத்து வளரா நிற்கும்
 விழுங்கியிருட் பிழம்புமுரஞ் சொளிகான் றெங்கும்
           வெறிகஞற்றும் குமுதமகட் புணருஞ் செல்வன்.

(இ - ள்.) இருட்டிரட்சியினையுட்கொண்டு முதிர்ந்த ஒளியினைக் கக்கியும் எப்பக்கங்களினும் வாசனையை நிறைவிக்கும் ஆம்பலாகிய பெண்ணைக்கூடும் சந்திரன், வளர்ந்து எழுகின்ற பசிய பயிரின் காட்சியைக் கருதி எம்மை மூடிக்கட்டி, உடன்முழுதும் மிக அழுந்துதல் செய்து, மிகவும் தினவை யிப்பயிர் உண்டாக்குமென் றச்சமுற்று வளர்ச்சியுறாது இடையிலே மடக்குந் திறத்தை மனத்தி லாய்ந்து செழித்த சுவையையுடைய தெளிந்த அமிழ்த கிரணங்களாற் செறிந்த கருப்பம் ஆகிய பாரத்தையுறுவித்து வளராநிற்கும் என்க.

(வி - ம்.) சந்திர கிரணம் பயிர்களிற் படினல்லது அப்பயிர்கள் மணிபிடியாதென்க. துவக்கி - பந்தித்து, கண்டூதி - தினவு. உறுத்து - உறுவித்து. முரஞ்சொளி - முதிர்ந்த வொளி;நிறைந்த வொளியென்க. "முரஞ்சன் முதிர்வே" யென்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. கஞற்றும் - நெருங்கும். செல்வன் - கதிர்ச்செல்வன், சந்திரன்.

(115)

 களபநெடு வாய்க்கிளைக்கு மிளங்கோ டென்னக்
           கவவுமடல் கிழித்தெழுவெண் கதிர்க ளெல்லாம்
 வளர்திறங்கண் ணகன்புடவி முழுது மான
           வல்லவுண னெண்ணிறலம் வதியப் பெற்றங்
 களவை யிடற்கரிய பிரான் வரத்தி னாற்றால்
           அங்கநிறை யுரோமமெல்லா மமரர் கோமான்
 உளநடுங்க வயிரநுதி யீட்டி யாக்கி
           யும்பர்பொதிர்த் தடநெடுகு மூக்க மானும்.

(இ - ள்.) யானைக்கன்றின் வாயினின்றுந் தோன்றும் இளங்கொம்பென்று சொல்லும் வண்ணம் அகத்திட்ட மடலைக் கிழித்துக் கொண்டு எழுகின்ற வெண்மை நிறம் பொருந்திய கதிர்கள் யாவும் நீண்டு வளர்ந்த தன்மையானது இடமகன்ற உலகமுழுதும் தன்வடிவமாகிய வலிய அவுணன் அளவிடமுடியாத திப்பிய தேசங்கள் தன்னிடத்தே தங்கப்பெற்று ஆண்டெழுந்தருளியிருக்கின்ற (காட்சி முதலிய) அளவை களான் அளத்தற்கருமையாகிய சிவபெருமான் வரத்தின்