பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்553

கோணல் வாயுடையராவார். ஈவார்களுக்கு இல்லாத பழிகளை உரைப்பவர் புழுக்களாவர். சமயநெறிகளை அழித்தவர் பல்லிற் புழுவுடையர் ஆவர். தீவினையாளரை அரசன் முதலியோர் கொல்லும்போது பொய்ச் சான்றுகூறி விலக்கிவிட்டவரும் பொலிவறப் பொய்வழக்குக் கூறினோரும் வருத்துகின்ற சலவாதராய்ப் பிறந்து இழிவடைவர்.

(வி - ம்.) காக்கைக்கண் - மாறுகண், ஒற்றைக்கண் எனினுமாம். அற்பு - அன்பு. சலவாதர் - முருடர்.

(346)

 எளியரை வதைத்தான் கால்கர மில்லா
           னெனைத்துமுட் கரவிலா வடியார்
 உளைதர வொறுத்தான் கால்கரந் தளர
           வுடலுறு குட்டநோ யாளன்
 அளியுறு மனையோ டலதுசூ தாதி
           யயன்மட மாதர்வே சையரில்
 களிதர முயன்றான் மெய்ம்மயி ரில்லான்
           கழிமிடி யுற்றிரந் தழிவான்.

(இ - ள்.) ஏழைமாந்தரைக் கொன்றோன், காலும் கையுமில்லாதவனாவான். சிறிதும் நெஞ்சத்தே வஞ்சனையில்லாத மெய்யடிமையாளரை வருந்தும்படி தண்டித்தவன் கால்கைகள் தளரும்படி குட்டநோயாளனாகப் பிறப்பன். பாதுகாத்தற்குரிய மனைவியோடல்லது சூது முதலியவற்றானும் பிறன்மனைவி, வரைவின்மகளிர் முதலியோரிடத்தும் இன்புற முயன்றவன் உடலில் மயிரற்றவன் ஆவன். மேலும் மிகவறுமையுற்று ஏற்றுண்டும் வருந்துவன்.

(வி - ம்.) எனைத்தும் - சிறிதும். கழி - மிகுதி. மிடி - வறுமை.

(347)

 கொண்டநோன் பிழந்தா னுறையுளை யிழப்பான்
           குறுகினோர் மாலையம் பொழுது
 விண்டிட விடநல் கான்மனை யவளை
           விடுத்துள மழுங்குவன் பெரியோர்க்
 கண்டெழுந் தெதிரான் பொருளினை யிழப்ப
           னிருமுது குரவர்பாற் கருத்துள்
 மண்டுமன் பில்லான் வறியனா யொன்றும்
           வந்துகை கூடிடா தலைவன்.

(இ - ள்.) மேற்கொண்ட நோன்பினை விட்டுவிட்டவன் இல்லத்தை இழந்துவிடுவன். அந்தி மாலைப்பொழுதில் தன்னில்லத்திற் கெய்திய விருந்தினர் தங்குதற்கு இடங்கொடாதவன் மனைவியை இழந்து நெஞ்சுபுண்ணாவன். சான்றோரைக் கண்டுழி எழுந்துசென்று எதிர்கொள்ளாதவன் பொருளை யிழப்பன். தாய் தந்தையர்பால் மிகு