பக்கம் எண் :

554தணிகைப் புராணம்

மன்பில்லாதவன் வறுமையுடையோனாய்க் கருதிய தொன்றும் கைகூடப்பெறாது திரிவன்.

(வி - ம்.) உறையுள் - வீடு. விட்டிட என்பது விண்டிட என மெலிதல் விகாரமுற்றது. விட்டிடல் - தங்குதல். இருமுதுகுரவர் - அன்னையும் அப்பனும்.

(348)

 வேதநுண் பொருளை யிழித்தவன் வேடன்
           வேதநூ லிழந்தவன் புலையன்
 வேதமெய் யினரை யிழித்தவன் மந்தன்
           வேதியர் பொருள்கொண்டோன் விட்டில்
 வேதநல் வழிவிட் டிச்சையா றெல்லாம்
           விளைத்தவ னுருவினு மனத்தும்
 வேதனை யென்றுந் தணப்புறான் முழுதும்
           விதப்புறி னும்பர்நா ளுலக்கும்.

(இ - ள்.) வேதங்கூறும் நுண்பொருளை இகழ்ந்தவன் வேடனாவன். வேதநூலைப் புறக்கணித்தவன் புலையனாவான். வேதியரை இகழ்ந்தவன் மந்தனாவன். வேதியர் பொருளைக் கவர்ந்துகொண்டவன் விட்டிலாய்ப் பிறப்பன். வேதங்கூறிய நன்னெறியை விடுத்துத் தன் அவாச் சென்றவழி எல்லாச் செயலையுஞ் செய்தவன் உடலானும் நெஞ்சானும் எப்பொழுதும் துன்பத்தினின்றும் பிரியான். அகத்தியனே இவற்றை விதந்து கூறின் அமரர் ஆயுளும் கழிந்தொழியும்.

(வி - ம்.) வேதநுண் பொருள் - இறை உயிர் கட்டு முதலியன. நூலிழத்தல் - நூலோதாது புறக்கணித்திடுதல். விட்டில் - ஒளியில் வீழ்ந்து மாயும் ஒரு பூச்சி. இச்சை - அவா. தேவராயுள் - நெடிதாகலின் உம்பர்நாள் என்றார். நாளும் எனல்வேண்டிய உயர்வு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது.

(349)

 பற்பல வதிபா தகமிழைத் தோர்பவ்
           வீப்புழுப் பற்பல்கா லாவர்
 பற்பல மாபா தகம்புரிந் தோர்கள்
           பற்பல்காற் பன்றிமெய் யெடுப்பார்
 பற்பல மாபா தகக்கினங் குயின்றோர்
           பற்பல்கா னாயுட றரிப்பார்
 பற்பல வுபபா தகம்விளைத் தோர்கள்
           பற்பல்கா லிழிஞரா யுதிப்பார்.

(இ - ள்.) மிகப்பலவாகிய மிகைத்தீவினைகளைச் செய்தோந் பற்பலமுறை மலப்புழுவாவர். மிகப்பல பெருந்தீவினைகளைச் செய்தோர் பன்முறையும் பன்றியாகப் பிறப்பர். மிகப்பலவாகிய பெருர் தீவினைக்கின வினைகளைச் செய்தோர் பலமுறையும் நாயாகப் பிறப்பர்.