| மேற்கொண்டியற்றி எம்பெருமானுடைய திருவடிமலரிற் கலந்துய்வர். இங்ஙனமாகவும் எய்துதற்கரிய சைவசமயத்தார் குடியிலே பிறந்து வைத்தும் அறிவு கெடுதற்குக் காரணமான புறச்சமய நூல் காட்டும் புன்னெறியிலே ஒழுகாநின்ற மடவோர், எளிதே கிடைத்த அமிழ்தத்தை உகுத்துவிட்டு நஞ்சினைப் பருகுகின்ற மடவோரையே ஒப்பாரல்லரோ! (வி - ம்.) பரமதம் - புறச்சமயம். அவை உலோகாயத முதலியன என்க. அறம் - வழிபாடு முதலியன. அவ்வச் சமயத்தினின்று செய்யும் அறமுண்மை காரணமாகச் சைவம் மருவுவர் என்றவாறு. உரம் - அறிவு; வலிமையுமாம். (356) | | பரிதியின் மதியின் வேறுபல் பொருளிற் | | | பயின்றிருள் பாற்றியொள் ளொளியைத் | | | தருவதோ ரழலே யதுவென வயனா | | | தியருழைத் தவிர்ந்துதன் றொழிலைப் | | | பொருவரு மிறையே புரியுமீ துணரார் | | | புகர்படு மொரோவொரு நூல்கொண் | | | டொருபர மயனை மாயனை மற்றை | | | யும்பரை யுயிரினைக் கிளப்பார். |
(இ - ள்.) ஞாயிற்றின்கண்ணும் திங்களின்கண்ணும் விண்மீன் விளக்கு முதலிய பிறபொருள்களிடத்தும் பொருந்திப் புறவிருளை யகற்றிப் பேரொளியை வழங்காநிற்பது தீ என்னும் அவ்வொரு பொருளே யன்றே; அங்ஙனமே மலரோன் முதலிய தேவரிடத்தே ஒப்பற்ற இறைவன் தன் ஆணையை நிறுத்தி அவர் வாயிலாய்த் தனக்குரிய படைப்பு முதலிய தொழில்களை இயற்றாநிற்பன். இவ்வுண்மை யுணரும் மதுகையில்லாதோர், குற்றமுடைய ஒவ்வொரு நூலையே ஓதி மலரோன் மாயோன் பிறதேவர் தம்முயிர் என்னுமிவரையே ஒப்பற்ற முழுமுதற் கடவுளர் என்று மயங்கிக் கூறாநிற்பர். (வி - ம்.) பாற்றி - அகற்றி. ஒள்ளொளி - பேரொளி. தவிர்ந்து - தங்கி. பொருவரு மிறை - ஒப்பற்ற சிவபெருமான். புகர் - குற்றம். உயிரினைப் பரமென்போர் மாயாவாதிகள். (357) | | லிரவிய மாயா வுருவினைக் கடந்து | | | விளங்குமா யாவுரு வுடையோன் | | | பரசிவன் மாயா வுருவினை யுடையோர் | | | பரமல ருயிரெனப் படுவார் | | | புரவியன் மாயா வுருவுறா தொழியிற் | | | போக்குயிர்க் கறிவுற லின்றாம் | | | வரமரு ளரனான் மற்றிரு வர்களும் | | | வயங்குமுத் தொழிலினைப் படுவார். |
|