| | வெம்பிய மலத்தை யுயிர்விட வறியா | | | விடுவது மலந்தனக் கில்லை | | | நம்பிய மாயை யுருவினைக் கொடுத்தே | | | நாயகன் புகர்மலங் கழிக்கும். |
(இ - ள்.) செம்பானது தன்பாலமைந்த களிம்பினைத் தானே போக்கிக்கொள்ள அறியமாட்டாது. அக்களிம்பும் தானே அகலுமியல்புடையதன்று. அச்செம்பிற் களிம்பினை அகற்றிப் பசிய பொன்னாகச் செய்யும் ஒருமருந்தும், அம்மருந்தியல்பறிந்த அறிஞரும் உளர் அல்லரோ. அங்ஙனமே, தாம் வெம்புதற்குக் காரணமான ஆணவ மலத்தை உயிர்கள் தாமே விடவும் அறியா. அம்மலமும் தானே விடுமியல்புடையதின்று. உயிர்களால் விரும்பும் மாயையாலான உடலை இறைவன் அவற்றினுக்குக் கொடுத்தே குற்றமாகிய சகசமலத்தைக் கெடுத்தருளுவன். (வி - ம்.) செம்பு - உயிர்க்குவமை. களிம்பு - ஆணவமலத்திற் குவமை. மருந்து - மாயைக்குவமை. மருத்துவப்புலவர், இறைவனுக் குவமை. (360) | | விளக்கது தானே தோன்றுத லில்லை | | | விழிவிளக் காக்குமா றறியா | | | துளக்கிரு ளிரிய விளக்கினை யொருவன் | | | றோற்றியங் களித்தென வாக்கை | | | அளக்கரும் பரம னளித்தலும் விளக்கி | | | னலர்விழி பொருளினுற் றாங்குக் | | | களக்குறும் வினையிற் கதித்துட லீட்டிக் | | | கறங்கெனச் சுழல்வன வுயிரே. |
(இ - ள்.) விளக்குத் தானே தோன்றமாட்டாது. விழிகளும் தமக்கின்றியமையாத விளக்கினைப் படைத்துக்கொள்ளும் வழியறிய மாட்டா. அவ்வுயிரினை வருத்தும் இருள்கெடும்படி ஒருவன் விளக்கினை யுண்டாக்கி அவ்விழிகட்கு வழங்கினாற் போன்று, உயிரால் அளத்தற்கரிய பரமசிவன் கருணையாலே மாயையினின்றும் உடலைப் படைத்து உயிர்கட்குக் கொடுத்த வளவிலே, அவ்விளக்கின் துணையால் மலர்ந்த அவ்விழிகள் பொருள்களிலே படர்ந்தாற்போன்று, உயிர்கள் உடல் பெற்றவுடனே குற்றமுடைய வீனையிலே இயங்கி மேலும் மேலும் அவ்வினைகட் கேற்ற உடலினை (இறைவன்தர)ப் பெற்றுத் துறக்கம்நிலம் நிரயமாகிய மேலுங்கீழும் காற்றாடிபோன்று பிறப்பிறப்பிலே பட்டுச் சுழலாநிற்கும். (வி - ம்.) விளக்கு - உடலுக்குவமை. விழி - உயிர்க்குவமை. ஒருவன் - இறைவனுக்குவமை. களக்கு - குற்றம். (361) வேறு | | உடலினைக் கரணந் தன்னைப் பொறியினை யுயிரென் பாரவ் | | | வுடல்பொறி கரண மெல்லா முடைப்பொரு ளுயிரென் றோரார |
|